அது ஏலியன் விமானம்தான்.. நம்மை நோட்டமிட வந்தது.. மர்மம் விலக தொடங்கும் ஒமுவாமுவா!
கடந்த 2017ம் வருடம் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் போன்ற வித்தியாசமான சாதனம் கண்டிப்பாக ஏலியன் வாகனம்தான் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video

நியூயார்க்: கடந்த 2017ம் வருடம் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் போன்ற வித்தியாசமான சாதனம் கண்டிப்பாக ஏலியன் வாகனம்தான் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 2017ம் வருடம் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.
உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான். இது மற்ற கற்களை போலவோ எரிநட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருந்தது.

என்ன பிரச்சனை இதில்
இதில் என்ன பிரச்சனை என்றால் இது விண்கல்லா, எரி நட்சத்திரமா, இல்லை வேறு எதுவுமா என்று தெரியாமல் விஞ்ஞானிகள் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதன் வடிவத்தை வைத்து எதையும் தீர்மானிக்க முடியவில்லை. அதே சமயம் இதில் இருந்து சிறிய சிறிய சிக்னல்களும் வந்து கொண்டு இருந்தது.

என்ன பெயர்
இது பூமியை மிக நெருக்கமாக கடந்த மிக வித்தியாசமான பொருள் ஆகும். இதனால் உடனே இந்த விண்கலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. அதன்படி இதை கண்டுபிடித்தவர்கள் இதற்கு 'ஒமுவாமுவா' என்று பெயர் வைத்தார்கள். இதன் அர்த்தம் ''வெளி உலகில் இருந்து வந்த தூதுவன்'' என்பதாகும்.

என்ன செய்தது
இது பூமிக்கு மிக அருகில் வந்துவிட்டு சென்றது. அதன்பின் சூரியனை நோக்கி சென்றுவிட்டு, பின் சூரியனை கடந்து வேறு வழியாக சென்றுவிட்டது. இது எந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் மிக நேர்த்தியாக அனைத்தையும் கடந்து மிக மெதுவாக சென்றது. தற்போது இது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

ஆராய்ச்சி செய்தனர்
இது பூமியை கடந்து சென்ற வித்தியாசமான சாதனம் என்பதால் இது குறித்து ஆராய ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் 650 கோடி ரூபாய் பணம் கொடுத்தார். ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் 'யூரி மில்னர்' 650 கோடி ரூபாய் பணம் கொடுத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இதை வைத்து ரஷ்யா மட்டுமில்லாமல் மற்ற நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

என்ன ஆராய்ச்சி
இதில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது விண்கல்லா, இல்லை ஏலியன் அனுப்பியதா, இல்லை வேறு ஒரு ஏலியன் விமானத்தின் சிதறிய பாகமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் இந்த ஆராய்ச்சிகளில் ஹார்வேர்ட் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

ஹார்வேர்ட் பல்கலைக்கழகம்
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷுமேல் பெய்லி தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டதாவது, இந்த சாதனம் கண்டிப்பாக ஏலியன் விமானம்தான். 95 சதவிகிதம் இது ஏலியன் விமானம்தான். இதை உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் விரைவில் வரும். ஆனால் இது ஏன் பூமியை நோக்கி வந்தது என்பதைத்தான் விரைவில் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

காரணம் என்ன
இது சூரியனுக்கு அருகில் சென்றுள்ளது, பூமிக்கு அருகில் வந்துள்ளது. ஆனால் அதை ஈர்ப்பு விசை பாதிக்கவில்லை. இதன் அர்த்தம் இதை யாரோ செயற்கையாக ஈர்ப்பு விசைக்கு எதிராக இயக்கி இருக்கிறார்கள் என்பதுதான். அதனால் இதை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்று கூறி உள்ளனர். இவர்களின் இந்த பேட்டி இணைய உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications