அந்த உயிர்களுக்கு என்ன ஆனது? டைட்டானிக் கப்பலை பார்க்க போன.. நீர்மூழ்கியில் ஆக்சிஜன் காலி.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்; டைட்டானிக் கப்பலை பார்க்க போய் கடலில் மாயமான டைடன் நீர் மூழ்கி கப்பலின் இருக்கும் ஆக்சிஜன் இந்த நேரத்திற்கு தீர்ந்து போய் இருக்கும் என்று மீட்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

டைட்டானிக் கப்பலை பார்க்க போய் கனடா கடல் பகுதியில் நீரில் மூழ்கிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக தற்போது அங்கே ரோபோட் உள்ளது.

Oxygen is reportedly over inside the Titan Submarine that went missing under the sea to see Titanic

கடலுக்குள் அடியில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளேது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.

இந்த டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate. இவர்களின் டைட்டன் நீர் மூழ்கி கப்பல்தான் தற்போது காணாமல் போய் உள்ளது. இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து பேரில், இதுவரை நான்கு பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் - ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் உள்ளனர்.

இந்த நீர் மூழ்கி காணாமல் போய் 95 மணி நேரங்கள் ஆகிவிட்டது. கணக்குப்படி இந்த கப்பலில் இன்று மாலை 4-5 மணிக்குள் உள்ளே இருக்கும் ஆக்சிஜன் எல்லாம் காலி ஆகி இருக்கும். 96 மணி நேரம் மட்டுமே இதற்கு உள்ளே அதிகபட்சம் ஆக்சிஜன் இருக்கும்.

அதற்கு மேல் உள்ளே ஆக்சிஜன் இருக்க வாய்ப்பே இல்லை. இதனால் 4-5 மணிக்குள் ஆகிசிஜன் மொத்தமாக காலி ஆகி இருக்கும். இதனால் உள்ளே இருக்கும் 5 உயிர்களுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுந்துள்ளது.

டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் காணாமல் போய் உள்ளது.

எப்படி காணாமல் போனது?: கனடா கடல் பகுதியில் டைட்டானிக்கை பார்க்க சென்ற போது பாதி வழியில் இது மயமாகி உள்ளது. சிக்னல் கட் ஆன காரணத்தால் இது காணாமல் போய் உள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் இருந்து இந்த நீர் மூழ்கியை மீட்க மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

மேலே இருக்கும் கமாண்ட் கப்பலுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இது காணாமல் போய் உள்ளது. ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைப் போலல்லாமல், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு குறைந்த சக்தி மட்டுமே உள்ளது மற்றும் அவற்றை ஏவுவதற்கும் திரும்பி மேலே வருவதற்கும் பெரிய எஞ்சின் எல்லாம் இல்லை. கீழே கொண்டு சென்று பாதி தூரத்தில் அப்படியே விடவும் அதன்பின் மேலே கொண்டு வருவோம் தனியாக ஆதரவுக் கப்பல் தேவை.

ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இதை அப்படியே கீழே போட்டுவிடுவார்கள். அது கடலுக்கு அடியில் மூழ்கி செல்லும். அதில் ஒரு கண்ட்ரோலர் மட்டும் இருக்கும். ஜாய் ஸ்டிக் போன்ற இந்த கண்ட்ரோலரை இயக்க வேண்டும். அதற்கு கூட ஜிபிஎஸ் பார்த்து இயக்க முடியாது. மேலே இருக்கும் கப்பலில் இருந்து சிக்னல் மூலம் மெசேஜ் அனுப்புவார்கள். அதை பார்த்து கீழே கப்பலனை ஜாய் ஸ்டிக் மூலம் இயக்க வேண்டும். தானாக இதை இயக்கி மேலே கொண்டு வரவே முடியாது. இந்த நிலையில்தான் அந்த நீர்மூழ்கி கப்பல் காணாமல் போய் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+