பாகிஸ்தானின் கதை முடியப்போகுது? இந்தியாவின் பக்கம் அமெரிக்க உளவுத்துறை! பின்னணியில் பெரிய பிளான்
நியூயார்க்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் தான் உள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அமெரிக்க உளவுத்துறை உதவி செய்யும் என்று அறிவித்துள்ளது.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேட்டில் சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 22 பேர் பலியாகினர். இந்த தாக்குலுக்கு லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை பிரிவாக செயல்பட்டு வரும் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கண்டனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றன. பயங்கராவதிகளின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராகி வருகிறது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கம் இடையே உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விமானப்படை, கடற்படைகளும் தயாராக உள்ளன. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி என்று அனைத்து தலைவர்களும் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று உறுதியாக கூறியுள்ளனர். இதனால் விரைவில் பாகிஸ்தான் மீது நம் படை வீரர்கள் பதிலடி தாக்குதலை நடத்துவார்கள். இந்நிலையில் தான் இந்தியாவுக்கு அமெரிக்காவின் உளவுத்துறை உதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் எப்பிஐ இயக்குநர் காஷ் படேல் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். காஷ் படேல் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்.
இவர் Federal Bureau of Investigation என்ற அமைப்பின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்த எஃப்பிஐ என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் காஷ் படேல் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதில், ‛‛காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு எஃப்பிஐ சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இந்த விஷயத்தில் இந்திய அரசுக்கு முழு ஆதரவை வழங்குகிறோம்.
இந்த சம்பவம் என்பது பயங்கரவாதத்தால் நம் உலகம் தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை நினைவூட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். இதுபோன்ற தருணங்களில் சட்ட அமலாக்கத்துறையில் பணியாற்றும் ஆண்கள், பெண்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்'' என கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறையின் இயக்குநர் துளசி கப்பார்ட் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ‛‛பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொடூரமாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள்(இந்தியா) வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்'' என கூறியுள்ளார்.
இந்த துளசி கப்பார்டு சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார். இவரது பெயரை பார்த்தால் இந்திய வம்சாவளி போல் இருக்கும். ஆனால் உண்மையில் இவர் இந்திய வம்சவாளியில்லை.அமெரிக்காவை சேர்ந்தவர். ஆனால் துளசி கப்பார்ட்டின் தாய் இந்து மதத்துக்கு மாறினார். அவர் தான் இந்த பெயரை வைத்துள்ளார். துளசி காப்பார்ட்டு இந்து மதத்தை பின்பற்றி வருகிறார். அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை பிரிவின் இயக்குநராக பொறுப்பேற்ற போது கூட பகவத்கீதை மீது சத்தியம் செய்து பதவி பிரமாணம் செய்தார்.
இவர் அமெரிக்க ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றினார். ஈராக் போர் சமயத்தில் முக்கிய பங்காற்றினார். சமீபத்தில் தான் ஜனநாயக கட்சியில் இருந்து குடியரசு கட்சிக்கு மாறினார். இவர் இந்து மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். குறுகிய காலத்தில் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கையை பெற்ற இவர் அமெரிக்காவின் தேசிய உளவுத்துறையின் இயக்குநராக முதல் இந்து பெண்ணாக பொறுப்பு ஏற்றார். இதனால் தான் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலிலும் கூட 26 இந்துக்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொன்றதாகவும் பகிரங்கமாக தெரிவித்து உள்ளதோடு, பயங்கரவாதிகளை வேட்டையாடும்போது இந்தியாவுடன் நாங்கள் இருப்போம் என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறை மற்றும் தேசிய உளவுத்துறை என இருதரப்பும் நம் நாட்டுக்கு பக்கப்பலமாக இருப்பதாக அறிவித்துள்ளன. அதாவது இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. இப்போதும் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அமெரிக்க உளவுத்துறை இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க உளவுத்துறை பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கதையை முடிக்க உதவி செய்யலாம் என்று கூறப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியிருந்தார். அப்போது ் அவர், ‛‛இந்தியாவும் எங்களின் நட்பு நாடு. பாகிஸ்தானும் எங்களின் நட்பு நாடு. இருநாடுகள் இடையேயான காஷ்மீர் பிரச்சனை 1000 ஆண்டுகளாக இருக்கிறது. அதனை இருநாடுகளும் பேசி தீர்த்து கொள்வார்கள்’’ என்று கூறினார். இதன்மூலம் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தள்ளி நிற்பதை டிரம்ப் வெளிப்படுத்தி இருந்தார். அதேவேளையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்தியாவின் பக்கம் நிற்பதாக கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications