தாலிபானை வளர்த்துவிட்டதும் இல்லாமல்.. இப்போது பிடனுக்கு பெரிய செக் வைத்த பாக்.. சிக்கலில் அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவிற்கு பெரிய செக் வைக்கும் நடவடிக்கை ஒன்றில் பாகிஸ்தான் இறங்கி உள்ளது. ஏற்கனவே ஆசிய நாடுகளில் இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில நாடுகளை தவிர வேறு ஆசிய நாடுகள் பெரிய அளவில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவிற்கும் மேலும் குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கை ஒன்றில் பாகிஸ்தான் களமிறங்கி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வெற்றிக்கு முக்கியமான மாஸ்டர்மைண்டாக செயல்பட்டது பாகிஸ்தான் நாடுதான். தற்போது தாலிபான் அமைப்பில் இருக்கும் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள்தான். ராணுவ ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி.. தாலிபானை அருகிலேயே இருந்து வளர்ந்துவிட்டது பாகிஸ்தான்தான்.

ஆனால் பாகிஸ்தான் பொதுவில் இதை ஒப்புக்கொண்டதே கிடையாது. பொதுவில் நாங்கள் தாலிபான்களுக்கு உதவி செய்யவில்லை என்பது போலவே பாகிஸ்தான் காட்டிக்கொண்டது. ஆனால் பாகிஸ்தான் தாலிபான் இடையிலான உறவு உலகம் அறிந்தது. அதேபோல் பாகிஸ்தானும் தாலிபான்களின் வெற்றியை தங்களின் வெற்றிபோல வெளிப்படையாக கொண்டாடியது. அதோடு தாலிபான் அரசை முதல் ஆளாக அங்கீகரித்தது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை வைத்து பெரிய திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்திற்குள் தலையிடும் முடிவில் பாகிஸ்தான் உள்ளது. முக்கியமாக இனி வரும் நாட்களில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் முழுக்க முழுக்க பாகிஸ்தான் ரூபாயில்தான் இருக்கும் என்ற முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இதுவரை டாலரில் வர்த்தகம் மேற்கொண்டு வந்தது.

வர்த்தகம்

வர்த்தகம்

வெளிநாடுகளுடன் ஆப்கானிஸ்தான் டாலர் மூலமே வர்த்தகம் செய்தது. இனிமேல் பாகிஸ்தான் உடன் ஆப்கானிஸ்தான் டாலருக்கு பதிலாக பாகிஸ்தான் ரூபாயில் மட்டுமே வர்த்தகம் செய்யும். டாலரை புறக்கணித்துவிட்டு தங்கள் நாட்டு பணத்தை முன்னிறுத்த பாகிஸ்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு செக் வைக்கும் விதத்தில் பாகிஸ்தான் துணிச்சலாக இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

அமெரிக்காவின் டாலர் மீதான ஈர்ப்பு ஆசியாவில் குறைந்து வருகிறது. அரபு நாடுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாகிஸ்தான் துணிச்சலாக இப்படி முடிவு எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அவர்களிடம் டாலர் கையிருப்பும் இல்லை. இறக்குமதி செய்ய போதுமான டாலர் கையிருப்பு இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பாகிஸ்தான் உள்ளே புகுந்து தங்கள் பணத்தை வைத்து வர்த்தகம் செய்ய சொல்கிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக இது பெரிய பலனை கொடுக்கும். முக்கியமாக ஆப்கானிஸ்தான் பொருளாதார ரீதியாக பாகிஸ்தானை நம்பும் நிலை ஏற்படும். பாகிஸ்தான்தான் இப்போதே தாலிபானை கட்டுப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தும் முடிவில் பாகிஸ்தான் இறங்கி உள்ளது. ஆப்கானிஸ்தானின் இறக்குமதி எல்லாம் தங்கள் நாட்டில் இருந்துதான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்துவேலை

சித்துவேலை

அமெரிக்க அதிபர் பிடனுக்கும், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானின் இந்த முடிவு பெரிய நெருக்கடியை கொடுக்கும். ஆசியாவில் அமெரிக்காவின் கைப்பிடியை இது மேலும் தளர வைக்கும். தாலிபான்கள் குழுவில் இருக்கும் தீவிரமான பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்குதான் ஆப்கானிஸ்தானில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. முல்லா காணி பராதர் பாகிஸ்தான் ஆதரவாளர். இவர்தான் துணை பிரதமராக இருக்கிறார். ஹக்கானி பாகிஸ்தான் ஆதரவாளர். இவர் அங்கு உள்துறை அமைச்சர். அமைச்சரவையில் இருக்கும் பலர் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+