பாகிஸ்தான் தூதரை விரட்டியடித்த அமெரிக்கா.. ஆவணங்கள் இருந்தும் உடனே நாடு கடத்திய அதிகாரிகள்.. அதிரடி
நியூயார்க்: அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற துர்க்மெனிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் தூதர் விசாக்கே வாகன் என்பவரை அந்த நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் அவசரஅவசரமாக விரட்டினர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் விமான நிலையத்தில் இறங்கி அவரை உடனடியாக அமெரிக்கா நாடு கடத்தியது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு என்பது விரிசலடைந்து உள்ளது. ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு இருதரப்புக்கும் இடையேயான உறவு என்பது மேம்பட தொடங்கி உள்ளது.

பயங்கரவாதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பயன்படுத்தும் அமெரிக்காவின் எஃப் 16 ரக போர் விமானங்களின் பராமரிப்புக்காக ரூ.3,461 கோடியை டொனால்ட் டிரம்ப் ஒதுக்கீடு செய்தார்.
அதன்பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு குழுவில் சில நாட்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது பாகிஸ்தானை பாராட்டினார்.
அதாவது கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது. அப்போது ஆபப்கானிஸ்தான் காபூலில் அப்பய் கேட்டில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 அமெரிக்க படை வீரர்கள், 100க்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் ஐஎஸ்ஐஎஸ் - கே பயங்கரவாத அமைப்பாகும். இந்த அமைப்பை சேர்ந்தவரும், தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவருமான முகமது ஷபியுல்லாவை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்தி உள்ளது. இவரை கைது செய்வதில் பாகிஸ்தான் அரசு அமெரிக்காவுக்கு உதவி செய்த நிலையில் டிரம்ப் பாராட்டினார்.
இதனால் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையேயான உறவு என்பது மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான் தற்போது அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் பாகிஸ்தான் தூதரை விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது துர்க்மெனிஸ்தான் என்ற நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக விசாக்கே வாகன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் உரிய விசா உள்பட அனைத்து ஆவணங்களுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா புறப்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தூதர் இறங்கினார்.
அப்போது அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது அவர் அமெரிக்காவில் நுழைவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. விசாவில் சர்ச்சைக்குரிய குறிப்புகள் இடம்பெற்றிருந்ததன் அடிப்படையில் அவர் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர் உடனடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என்று குடியுரிமை அதிகாரிகள் கூறினர். அதன்படி அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து உடனடியாக நாடு கடத்தப்பட்டார்.
அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை அமெரிக்கா தனது நாட்டுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு ஒரு தகவல் வெளியானது. அதாவது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வருவோருக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டொனால்ட் டிரம்ப் தடை விதிக்க உள்ளதாக கூறப்பட்டது. சில நாடுகளில் விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சோதனை என்பது முறையாக இருக்காது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அந்த வகையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வருவோருக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே தான் துர்க்மெனிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் தூதர் விசாக்கே வாகன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இறங்கியதும் விரட்டியடிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் அமெரிக்காவில் அனுமதிக்கப்படாததற்கான விரிவான காரணங்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கி உள்ளது.
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications