எங்க கதையை முடிச்சுருவாங்க.. இந்தியாவிடம் தண்ணீர் தர உடனே பேசுங்க..அமெரிக்காவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்
வாஷிங்டன்: ‛‛சிந்து நதியில் தண்ணீரை நிறுத்துவது போருக்கு சமமானது. எனவே அமெரிக்கா தலையீடு செய்து இந்தியாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர வேண்டும்'' என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுறத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கெஞ்சியுள்ளார்.
பாகிஸ்தானின் முக்கிய நீராதாரம் என்பது சிந்து நதிநீர் தான் சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை நம் நாடும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொண்டு வந்தன. 1960ம் ஆண்டில் உலக வங்கி முன்னிலையில் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நீர் பங்கீடு செய்யப்பட்டு வந்தது.

அதன்படி இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலாப் பயணிகளை கொன்றனர்.
இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்பாக பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. பாகிஸ்தானை எடுத்து 24 கோடி மக்கள்தொகை உள்ளது. இதில் 22 கோடி பேருக்கு நீராதாரம் என்பது சிந்து நதி தான். இதனால் நம் நாடு அந்த நீரை பகிர்ந்து கொள்ளும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது.
முதலில் சிந்து நதி நீரை திறந்து விடாவிட்டால் ரத்த ஆறு ஓடும். பாகிஸ்தான் அணுகுண்டுகளை வீசும் என்று வாய்ச்சவடால் விட்ட பாகிஸ்தான் தற்போது மண்டியிட்டுள்ளது. ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நம்நாடு கொடுத்த பதிலடியில் கலங்கிப்போன பாகிஸ்தான் இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கெஞ்சி வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் நீர்வளத்துறை சார்பில் நம் நாட்டுக்கு 4 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் நம் நாடு பிடிகொடுக்கவில்லை.
இந்நிலையில் தான் இந்தியா நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் தலையீட்டு தண்ணீரை வாங்கி தர வேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ கெஞ்சியுள்ளார். ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நம்மிடம் சம்மட்டி அடி வாங்கிய பாகிஸ்தான் அதுபற்றி பொய்களை பரப்ப வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பி உள்ளது. பிலாவல் பூட்டோ தலைமையிலான குழுவினர் அமெரிக்கா சென்றனர்.
வாஷிங்டனில் உள்ள மிடில் இஸ்ட் இன்ஸ்ட்டியூட்டில் பிலாவல் பூட்டோ பேசினார். அப்போது, ‛‛சிந்து நதியில் தண்ணீரை நிறுத்துவது போருக்கு சமமானது என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். இது வெறும் தேசியவாதம் அல்லது அரசியல் சார்ந்த கருத்து இல்லை. இது எங்களின் வாழ்வாதார பிரச்சனை. உலகில் எந்த நாடாக இருந்தாலும், எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் சரி. தண்ணீரை நிறுத்தினால் அமைதியாக இருக்காது. ஒவ்வொரு நாடும் தண்ணீருக்காக போராடும்.
தண்ணீருக்கான போர் என்பது ஒரு காலத்தில் வெறும் கருத்தியலாக தான் இருந்தது. இப்போது பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீரை நிறுத்தி இந்தியா அந்த போருக்கு அடிக்கல் நாட்டி உள்ளது. இது அணுஆயுத போருக்கான அச்சுறுத்தலாக கூட மாறும். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையீட்டு இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் வாங்கி தர வேண்டும்'' என்று கெஞ்சியுள்ளார். இதன்மூலம் சிந்து நதி நீர் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையீட்டு தீர்வு காண வேண்டும் என்று பிலாவல் பூட்டோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications