டிரம்ப் ஆட்சியில் பெரியதாக வெடிக்க இருக்கும் பூகம்பம்! காரணம் இந்த 2 விஷயங்கள்தான்!
நியூயார்க்: அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் அபார வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அதிபராக பதவியேற்கிறார். ஆனால், அதன் பின்னர் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் வெடிக்க இருப்பதாகவும், அதற்கான காரணங்களாக இரண்டு விஷயங்கள் இருப்பதாகவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஷெட்யூல் எஃப் திட்டம்: கடந்த 2016-2020 வரை டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தார். அவருடைய பதவிக்காலம் முடியும் தருவாயில், அதாவது 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 'ஷெட்யூல் எஃப்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற பைடன் இந்த உத்தரவை அப்படியே ரத்து செய்தார். இப்போது மீண்டும் அதிபராகியுள்ள டிரம்ப், தனது ஆட்சிக்காலத்தில் ஷெட்யூல் எஃப்-ஐ உயிர்ப்பிக்கப்போகிறார். இது அமெரிக்காவில் பெரிய பிரச்னையை உண்டாக்கும்.

ஷெட்யூல் எஃப் என்றால் என்ன?: அமெரிக்காவின் பெடரல் சிவில் சர்வீஸ் அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தவே இது கொண்டு வரப்பட்டது. சிவில் சர்வீஸ் அமைப்பில் உள்ள ஊழியர்களை இந்த சட்டத்தின் மூலம் பணி நீக்கம் செய்ய முடியும். அரசின் திட்டங்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியைதான் சிவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். நலத்திட்டங்கள் யார் யாருக்கெல்லாம் செல்கிறது? அது சமூகத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது? திட்டங்களில் எதை மாற்றினால் கூடுதல் வளர்ச்சியை எட்ட முடியும் என்கிற ஆய்வை சிவில் சர்வீஸ் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
பிரச்சனை என்ன?: இந்த ஷெட்யூல் எஃப் மூலம் சிவில் ஊழியர்களில் யாரை வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்க முடியும். அதாவது திறன் அடிப்படையில்தான் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் ஷெட்யூல் எஃப் மூலம், இனி ஊழியர்கள் அரசியல் சார்பு நிலையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்/பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அதாவது நீங்கள் டிரம்பின் விசுவாசியாக இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஒருவேளை டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தால் வேலையை விட்டு தூக்கப்படுவீர்கள்.
அமெரிக்காவின் பெடரல் சிவில் சர்வீஸ் அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது. அப்படியான இடத்தில் இப்படி ஒரு மாற்றம் நடந்தால் மக்கள் கொந்தளிப்பு ஏற்படும்.
ப்ராஜெக்ட் 2025: டிரம்ப் ஆட்சியில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது விஷயம் 'ப்ராஜெக்ட் 2025'. இதுவும் ஏறத்தாழ 'ஷெட்யூல் எஃப்' போலத்தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது. இந்த திட்டத்தின் மூலம் தனது அரசியல் குழுவை அதிகாரத்திற்கு கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார். இந்த குழு கூட்டாட்சி அரசாங்கத்தை மறுவடிவமைத்தல், பழமைவாத கொள்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
கருக்கலைப்பு: அமெரிக்காவில் கருக்கலைப்பு என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அந்நாட்டின் நீதிமன்றங்கள் இதற்கு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியிருந்தன. எனவே இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் 'ப்ராஜெக்ட் 2025' கருக்கலைப்பு உள்ளிட்ட விவகாரங்களை தடுக்க, கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறது. இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதற்கு சமம்.
தவிர, கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்த வழி வகுக்கிறது. அதாவது அமெரிக்காவில் விற்கப்படும் அல்லது எழுதப்படும் புத்தகங்கள் நாட்டின் அரசுக்கு எதிராக/ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்களை பிரதிபலிப்பதாக இருந்தால், அந்த புத்தகத்தின் ஆசிரியரை சிறையில் அடைக்க ப்ராஜெக்ட் 2025 வலியுறுத்துகிறது. தவிர, கூடுதலாக வேலை செய்வதற்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதை தடை செய்தல், வழக்கறிஞர்களுக்கு எதிராக புகார் பதிவு செய்தல் ஆகியவற்றை இந்த ப்ராஜெக்ட் 2025 வலியுறுத்துகிறது.
இது எல்லாமும் ஆரம்பத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு ஓகேவாக தெரிந்தாலும், ஒரு நாள் அவர்களே இதற்கு எதிராக குரல் எழுப்ப கூடும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications