நியூயார்க்கில் இந்திய மாணவருக்கு நடந்த கொடூரம்.. அமெரிக்க தூதரகம் கொடுத்த ரியாக்‌ஷனை பாருங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நேவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவரிடம் அமெரிக்க அதிகாரிகள் கடுமை காட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவர் ஒருவருக்கு கைவிலங்கு போட்டு, அவரை தரையில் அழுத்தி பிடித்தபடி காவல்துறையினர் நிற்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நேவார்க் ஏர்போர்ட்டில் இந்திய மாணவரிடம் அமெரிக்க அதிகாரிகள் கடுமை காட்டிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்திய மாணவர் ஒருவருக்கு கைவிலங்கு போட்டு, அவரை தரையில் அழுத்தி பிடித்தபடி காவல்துறையினர் நிற்கும் காட்சிகள் வெளியாகி அதிர வைத்து இருக்கிறது.

right-to-entry-not-guaranteed-says-us-embassy-amid-indian-student-detentions

இந்த காட்சிகளை, அந்த வழியாக சென்ற அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் வீடியோவாக பதிவிட்டு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அந்த பதிவில், ஒரு பயங்கரவாதியை கூட இப்படி நடத்த மாட்டார்கள் எனவும் அந்த மாணவரும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார் என்றும் கூறியிருந்தார். அந்த மாணவர் இந்தியில் பேசிக்கொண்டிருந்ததாகவும், அது அங்கிருந்த அதிகாரிகளுக்குப் புரியவில்லை, போலீஸ் பிடியில் இருந்த , இந்திய மாணவருக்குத் தான் உதவ முன்வந்தபோதும் அதனைக் காவலர்கள் அனுமதிக்கவில்லை" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- "சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கு வரும் பயணிகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம், விசா இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைவது, விசா விதிகளை மீறுவது போன்ற சட்டவிரோத செயல்களை அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்திய மாணவர் தொடர்பான வீடியோ பரவிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- நேவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் என்று சொல்லப்படும் நபருக்கு ஏற்பட்ட சிரமங்கள் தொடர்பான வீடியோவை நாங்கள் பார்த்தோம். உள்ளூர் அதிகாரிகளுடன் இது தொடர்பாக நாங்கள் தொடர்பில் உள்ளோம். இந்திய நாட்டவர்களின் நலன்களை உறுதி செய்வதில் தூதரகம் உறுதியாக உள்ளது என்று பதிவிட்டு இருந்தது.

இதற்கிடையில், இந்த வீடியோ வெளியானதை அடுத்து காங்கிரஸ் கட்சி, மோடி அரசை விமர்சித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் இந்தியர்கள் "மோசமாக நடத்தப்படுவதை" தடுக்க பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக டொனால்ட் டிரம்ப்பை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "மோடி அரசு இந்தியாவையும், இந்தியர்களையும் பாதுகாப்பதில் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது," என்று குற்றம் சாட்டினார். அமெரிக்க தூதரகத்தின் இந்த அறிக்கை, சட்டபூர்வமாக வருபவர்களை அமெரிக்கா வரவேற்கிறது. அதே நேரத்தில் சட்டவிரோத செயல்களைத் தடுக்க உறுதியாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அமெரிக்காவில் இதுபோல சுமார் 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப், பல அதிரடி சட்டங்களைக் கொண்டு வருகிறார். அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருக்கவே சட்டவிரோத குடியேறிகள் தான் காரணம் எனக்கூறி வந்த டிரம்ப், அவர்களை வெளியேற்றப் போவதாகக் கூறி வந்தார்.

தேர்தலுக்கு முன்பே இதை வாக்குறுதியாக டிரம்ப் கூறி வந்த நிலையில், அதிபராகப் பதவியேற்ற உடன் அதை கடுமையாக செயல்படுத்தி வருகிறார். இந்த ஆண்டின் துவக்கத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் நாடு கடத்தப்பட்டனர். அப்போது, இந்தியர்களுக்க்கு கை, கால்களில் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அவர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் பெரும் சர்ச்சையானது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+