செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள்.. சிக்கிய முக்கிய ஆதாரம்! விஞ்ஞானிகள் கொடுத்த ஷாக்
நியூயார்க்: சூரிய குடும்பத்தில் இப்போதைக்கு பூமியில் மட்டுமே உயிர்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், பூமியை தவிர செவ்வாய் கிரகத்திலும் உயிர்கள் (ஏலியன்கள்) இருந்திருக்கலாம் என்று தற்போது அவர்கள் கூறியுள்ளனர்.
நான் பெரியவன், நீ சிறியவன் என்கிற சண்டை காலங்காலமாக இருந்து வருகிறது. ஆனால், நாம் எப்படி, எங்கு வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உண்மை தெரிய வந்தால், நமக்குள் இப்படியான சண்டைகளே வராது. ஆம் மக்களே! பூமி இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்கும் ஒரே ஒரு கோளாக இருந்து வருகிறது. இப்போது வரை வேறு எங்கும் நாம் உயிரினங்களை கண்டுபிடிக்கவில்லை. அப்படியெனில் நாம் தனித்து வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் உண்மை.

ஆனால் நமது பக்கத்து கிரகமான செவ்வாயில், ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மீது விண்கல் அல்லது வால் நட்சத்திரம் ஒன்று வேகமாக மோதியிருக்கிறது. இதனால் கிரகத்தின் மேற் பரப்பில் இருந்த கற்கள், மண் துகள்கள் விண்வெளியில் வீசி எறியப்பட்டிருக்கின்றன. இதில் சில பூமியிலும் வந்து விழுந்திருக்கிறது.
இப்படி சகாரா பாலைவனத்தில் விழுந்த விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் 2011ம் ஆண்டு கண்டெடுத்தனர். இதற்கு 'NWA7034' என பெயரிடப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் இருந்த எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியேற்றி இருக்கிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளாக இறுகி, இறுகி கண்ணாடி போன்ற நிலையை எட்டியிருக்கிறது. இதன் மீதுதான் வால் நட்சத்திரம் மோதியுள்ளது. ஆக இப்படியாக பூமிக்கு செவ்வாய் கிரகத்தின் துகள் வந்து சேர்ந்தது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செவ்வாயில் உயிர்கள் இருந்ததற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடியிருக்கிறது. இந்நீரால் சில தாவரங்கள் முளைத்திருக்கின்றன. இந்த தாவரத்தின் படிமம் செவ்வாயிலிருந்து பூமிக்கு வந்த விண்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தாவரங்கள் இருந்திருக்கிறது எனில், அதை உண்ணும் உயிரனங்களும் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் எந்த மாதிரியான உயிர்கள் செவ்வாயில் இருந்தது என்பது இப்போது வரை தெரியவில்லை. தோராயமாக சொல்வதெனில், பூமியில் இருந்ததை போல உயரமாகவும், அகலமாகவும் இல்லாமல், மிகவும் சிறியதாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக ஒட்டுண்ணிகளை போல இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆக்சிஜனை மட்டும் நம்பியில்லாமல், மற்ற சில வாயுக்களையும் பிரானவாயுவாக பயன்படுத்தும் உயிர்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இன்றைய தேதியில் செவ்வாயில் எதுவும் கிடையாது. எனவே, பூமியில் நாம் இருக்கும் வரை ஒற்றுமையாக இருந்து செல்வோம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications