இன்று பூமியை நெருக்கமாக கடக்கும் இரண்டு விண்கற்கள்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்! நாசா வார்னிங்
நியூயார்க்: இன்று பூமியை இரண்டு விண்கற்கள் நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. இந்த விண்கற்கள் செல்லும் பாதையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட, அது பூமிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நம்முடைய உலகம் தனிமையில் இல்லை. சுற்றி ஏழு கோள்களும், ஏராளமான சிறு கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும் இருக்கின்றன. ஒருபுறம் நாம் தனியாக இல்லை என்று நிம்மதி அடைந்தாலும், மறுபுறம் நம்மை சுற்றியுள்ள பொருட்கள்தான் நமக்கு எமன் என ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதாவது விண்வெளியில் உள்ள விண்கற்கள் எப்போது, எப்படி பூமியை தாக்கும் என்று தெரியாது. சிலவற்றை மட்டுமே சரியாக கணிக்க முடியும். பலவற்றை முன்கூட்டியே கண்டறிய முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அப்படியொரு அச்சுறுத்தல்தான் இன்று பூமிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது 2 விண்கற்கள் இன்று பூமியை நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின், 'ஜெட் புரஃபலேஷன் ஆய்வகம்' பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் இன்று 2024 RO2, 2024 RJ16 என்கிற இரண்டு விண்கற்கள் நம்மை நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது.
இதில் 2024 RO2 என பெயரிடப்பட்ட விண்கல், 110 அடி அளவு கொண்டிருக்கிறது. இது இன்று இரவு பூமியை சுமார் 16 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்கிறது. 16 லட்சம் கி.மீ என்பது பெரிய தொலைவாக தெரியலாம். ஆனால், பக்கத்தில் இருக்கும் செவ்வாய் கிரகம் 5 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. அப்படியெனில் 16 லட்சம் கி.மீ, பூமிக்கு எவ்வளவு நெருக்கம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இந்த விண்கல் மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது.

தப்பி தவறி பூமி மீது மோதினால், ஹிரோஷிமாவில் விழுந்ததை போல 75 அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ, அந்த அளவுக்கு இந்த விண்கல் பாதிப்பை ஏற்படுத்தும். விண்கல் விழுந்த இடத்தில் 15 சுற்றளவுக்கு 1-2 கி.மீ ஆழத்திற்கு மிகப்பெரிய பள்ளம் உருவாகும். 5-6 கி.மீ சுற்றளவுக்கு இந்த விண்கல் பாதிப்பு அதிர்வுகள் உணரப்படும். 100 கி.மீ சுற்றளவில் பெரும் காட்டுத்தீ ஏற்படும். ஆனால் விண்கல் பூமி மீது மோத 1 லட்சத்தில் வெறும் 1% வாய்ப்பு மட்டுமே இருக்கிறது.
இரண்டாவதாக உள்ள 2024 RJ16 எனும் விண்கல், 75 அடி அகலம் கொண்டதாகும். இது பூமியை 69 லட்சம் கி.மீ தொலைவில், 25,000 கி.மீ வேகத்தில் கடக்கும். இதுவும் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications