மனிதர்களால் நடந்த மிகப்பெரிய தவறு! காலநிலை மாற்றத்தால் ஏற்பட போகும் பேரழிவு! எச்சரிக்கை
நியூயார்க்: மனிதர்களின் நடவடிக்கை காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றமானது, பூமியின் சுழற்சியை பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது இப்படியே தொடர்ந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழக்கூடிய ஒரே ஒரு கிரகமாக பூமி இருக்கிறது. பிரபஞ்சத்தில் வெவ்வேறு சூரிய குடும்பங்களில் உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கும் கிரகங்களாக சில அடையாளம் காணப்பட்டாலும் கூட, அங்கு இதுவரை எந்த உயிர்களையும் நாம் கண்டுபிடிக்கவில்லை. இப்படி இருக்கையில் வாழ வைக்கும் பூமியை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு. ஆனால், மனித நடவடிக்கைகள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இது பூமியின் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. தன்னை தானே சுற்றும்போது பூமியில் வளிமண்டலங்கள் ஆக்டிவாக இருக்கின்றன. மழைப்பொழிவு, காற்றின் சுழற்சி உள்ளிட்டவை சீராக இருக்கிறது. மிக முக்கியமாக சூரிய ஒளி ஒரே இடத்தில் படாமல் இந்த சுழற்சி பாதுகாக்கிறது. ஒருவேளை இது சுழலாமல் இருந்தால் பூமி ஒரு பக்கம் வெளிச்சமாகவும், மறுபக்கம் இருளாகவும் இருக்கும். இதானல் சூரியனிலிருந்து வெளி வரும் புற ஊதாக்கதிர்கள் பூமியின் வெளிச்சமான பகுதியை பாலைவனம் போல மாற்றிவிடும்.
அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படும். நீர் நிலைகள் முற்றிலுமாக வறண்டு போகும். சுழற்சி நின்றதால் மழைப்பொழிவு ஏறத்தாழ சாத்தியமற்றதாக மாறிவிடும். எனவே வெளிச்சமான பகுதி பொட்டல் காடாக மாறிவிடும். அதேபோல இருளான பகுதிகளில் உயிர்கள் வாழ்வதற்கு கடும் போட்டி ஏற்படும். கடும் குளிர் இந்த பகுதிகளை ஆக்கிரமிக்கும். இவை அனைத்திற்கும் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் முக்கிய காரணியாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பேராசிரியர் பெனடிக்ட் சோஜா, நேச்சர் ஜியோசைன்ஸ் மற்றும் பிஎன்ஏஎஸ் ஆகியவற்றில் இது குறித்த ஆய்வு முடிவுகளை எழுதியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, "மனிதர்களின் நடவடிக்கை காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இது துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளை உருக்குகிறது. உருகும் நீர், கடலில் கலக்கிறது. அதாவது பூமியின் மையப்பகுதிக்கு வருகிறது. இது பூமியின் சுழற்சி வேகத்தை பாதிக்கிறது.
இந்த வேகம் பாதிக்கப்பட்டால் பல்வேறு விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக விண்வெளி பயணங்களில் பல தவறுகள் நடக்கும். பூமியின் சுழற்சி வேகத்தை கணக்கிட்டுதான் நிலவுக்கும், செவ்வாய் உள்ளிட்ட வெளி கிரகங்களுக்கும் நாம் விண்கலன்களை அனுப்புகிறோம். அப்படி இருக்கையில், சுழற்சி வேகம் குறையும்போது நமது கணக்கீடுகள் அனைத்தும் தோல்வியடையும்" என்று கூறியுள்ளார்.
சுழலும் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு, இரு கைகளையும் நீட்டியவாறு சுழன்று பாருங்கள். பின்னர் இரண்டு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து வைத்து சுழன்று பாருங்கள். இரண்டுக்கும் சுழற்சி வேகம் வேறுபடும். கைகளை நீட்டியிருக்கும் போது வேகம் குறைவாகவும், கைகளை உடலோடு சேர்த்து வைக்கும்போது வேகம் அதிகமாகவும் இருக்கும்.
பூமியின் சுழற்சியும் இதே கணக்குதான். துருவ பகுதியில் பனிக்கட்டிகள் இருக்கும் வரை பூமியின் வேகம் சீராக இருக்கும். அதுவே, இந்த கட்டிகள் நீராக உருகி மையப்பகுதிக்கு வரும்போது வேகம் குறையும் என்று பூமியின் சுழற்சி குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications