சூப்பர்ல.. முதல்முறையாக.. ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை.. இந்தியாவின் பரிசு இது..!!

ஐநாவில் அடுத்த மாதம் நடக்கும் விழாவில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்க உள்ள நிலையில், ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது... இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசாக வழங்கியிருக்கிறது.

 Sweet news and mahatma gandhi statue to installed in united nations head quarters

இந்த சிலை ஐநா தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது.. அடுத்த மாதம் 14-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஐநா செல்ல உள்ள நிலையில், இந்த சிலை திறக்கப்படுகிறது.

இந்த சிலை திறப்பு விழாவில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மகாத்மா காந்தி சிலையை, புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்துள்ளார். இதன்மூலம் ஐநா தலைமையகத்தில் முதல்முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது..

இதுகுறித்து, ஐநாவுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐநாவுக்கு பரிசாக தந்திருந்தது.. அது பாலப் பேரரசு கால 11ம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும்.. அதனை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பரிசாக அளித்தார்.. அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.. அந்த சிலைதான் ஐ.நாவுக்கு இந்தியா அளித்த முதல் பரிசாகும்..

இப்போது ஐநாவில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலையானது, இந்தியாவின் 2வது பரிசாகும்.. அந்த சிலை திறக்கப்பட உள்ள ஐ.நா. தலைமையகப் புல்வெளி பகுதியில்தான், 1961 முதல் 1989ம் அண்டு வரை ஜெரம்னியை பிரித்த பெர்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலைகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+