நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாலிபான்களுக்குகூட இடம் இருக்கே.. எனக்கு எங்கே?.. கோர்ட் வரை சென்று புலம்பி தீர்த்த டிரம்ப்..!

ட்ரம்ப், ட்விட்டர் கணக்கை மீட்டு தரும்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: தன்னுடைய ட்விட்டர் கணக்கை மீட்டு தரும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அதிபர்.. அத்துடன், ட்விட்டர் நிறுவனம் மீது புகார்களை அள்ளி வீசியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது... எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையிலேயே அசால்ட்டாக இருந்த டிரம்ப், கடைசியில் தோற்றுவிட்டார்..

ஆனால், தான் தோல்வி அடைந்ததை டிரம்ப்பால் தாங்கி கொள்ள முடியவில்லை.. அதை ஜீரணிக்க முடியாமல் பதவியேற்க போகும் அரசை கடுமையாக தாக்கி பேசி வந்தார்.

ரிவர்ஸ் இன்ஜினியரிங்.. அமெரிக்காவிற்கு எதிராக சீனா, தாலிபான் எடுத்த அஸ்திரம்- பகீர் கிளப்பிய டிரம்ப் ரிவர்ஸ் இன்ஜினியரிங்.. அமெரிக்காவிற்கு எதிராக சீனா, தாலிபான் எடுத்த அஸ்திரம்- பகீர் கிளப்பிய டிரம்ப்

வன்முறை

வன்முறை

இதற்காக கோர்ட் வரை போய், போராடி தனக்காகவே வாதாடி தோற்று போனார்.. எனவே, தன்னுடைய ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதுடன், அந்த பேச்சை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டார்... இந்த பேச்சை கேட்டு, அவரது ஆதரவாளர்கள் மேலும் எமோஷனல் ஆகிவிட்டனர்.. கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையிலும் ஈடுபட்டனர்...

 வீடியோ

வீடியோ

இதுகுறித்து வீடியோ, போட்டோக்களும் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை தந்தது... கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டபடியே இருந்தார்..

வழக்கு

வழக்கு

இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாக கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் டிரம்பின் அதிகாரப்பூர்வ கணக்கை முடக்கின... இதனால் அதிர்ந்து போனார் டிரம்ப்.. இந்த நடவடிக்கையை எதிர்த்து சமூக வலைதள நிறுவனங்கள் மீதும் அதன் தலைமை செயலதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்போவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்..

மனுதாக்கல்

மனுதாக்கல்

அந்த வகையில் இப்போது ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக புளோரிடாவில் உள்ள தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்... தன்னுடைய ட்விட்டர் கணக்கை மீட்டுத் தரும்படி ஃப்ளோரிடா கோர்ட்டில் ட்ரம்ப் மனுத்தாக்கல் செய்துள்ளார்... அதில், ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் அரசியலை ஆக்கிரமிக்கும் வகையிலும், முன்னெப்போதும் இல்லாத வகையிலும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் இருப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    அரங்கேறும் Taliban-களின் கொடூர தண்டனைகள் | Afghanistan Updates | Oneindia Tamil
    முத்திரை

    முத்திரை

    அதுமட்டுமல்ல, "தாலிபான்கள் கூட சுதந்திரமாக ட்விட்டரில் பதிவிடுவதற்கு ட்விட்டர் நிர்வாகம் அனுமதிக்கிறது, ஆனால் தான் அதிபராக இருந்தபோது தனது ட்வீட்டுகள் போலித் தகவல்களை கொண்டவை என்று ட்விட்டர் தொடர்ந்து முத்திரை குத்துகிறது" என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

    புலம்பல்

    புலம்பல்

    கடந்த காலங்களில் சோஷியல் மீடியாதான் டிரம்ப்புக்கு பலமாக இருந்தது.. இதைவைத்துதான், எதையாவது பேசி தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.. அதன்மூலம் பெருகும் வன்முறையில் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.. இப்போது மொத்த கணக்கையும் முடக்கிவிட்டதால், அரசியல் செய்ய முடியாமல், மீண்டும் கோர்ட் வாசலை மிதித்துள்ளார் டிரம்ப்.

    English summary
    Taliban: Trump asks court to force twitter to restore his account again
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X