நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நியூ ஜெர்சியில் ஓடும் ரயிலில் சிக்கிய இந்தியர்.. நேர்ந்த பயங்கரம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்; தெலுங்கானாவைச் சேர்ந்த பிரவீன்(38 வயது) நேற்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள எடிசனில் ரயில் மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் பிரவீன் தேசினி. எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருந்தகத்துறை ஊழியராக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நவதாவும் 3 வயது மகனும் அவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

Telangana Man died after train accident In New Jersey

பிரவீன் தேசினி தற்போது நியூயார்க்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதன்கிழமை அன்று நியூ ஜெர்சியில் உள்ள எடிசனில் ரயில் மோதி உயிரிழந்தார். எப்படி அவர் ரயில் பாதைக்கு சென்றார் என்று உடனடியாகத் தெரியவில்லை.

பிரவீன் தேசினி உடல் நியூ ஜெர்சியில் உள்ள மிடில்செக்ஸ் பிராந்திய மருத்துவ பரிசோதனையில் வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவின் வாரங்கலில் உள்ள பிரவீன் தேசினியின் குடும்பத்தினருக்கு புதன்கிழமை அவரது மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரவீன் தேசினியின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதற்காக Gofundme.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரவீனுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். இவர் தான் குடும்பத்தில் இளையவர் மற்றும் அவரது தந்தை ஓய்வு பெற்ற பஞ்சாயத்து ராஜ் துறை ஊழியர் ஆவார்.

English summary
A 38-year-old man from Telangana was run over by a train in New Jersey's Edison on Wednesday. An MBA graduate, Praveen Desini was working in the US for the last five years. His wife Navatha and 3-year-old son were living in the US with him. His body has been kept at the Middlesex Regional Medical Examiner in New Jersey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X