நைட் மேனேஜர் செய்யுற வேலையா இது! அதிகாலை 5 மணிக்கு அலறி எழுந்த கெஸ்ட்.. ஷாக்கான போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நீயூயார்க்: அமெரிக்காவில் ஓட்டல் ஒன்றில் இரவு நேர மேனேஜராக இருந்த 52 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்துள்ள காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் நாஷ்வில்லில் உள்ள 4வது அவென்யூ சவுத் ஹில்டன் ஹோட்டலில் ஒருவர் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக அவர் இந்த அறையில்தான் தங்கியிருக்கிறார். இந்நிலையில் மார்ச் 30ம் தேதியன்று நடந்த சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் அன்று நாள் முழுவதும் வெளியில் சுற்றிவிட்டு இரவு ரூம் வந்து சேர்ந்திருக்கிறார். ஏற்கெனவே வெளியில் சுற்றியதால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக வந்தவுடன் படுத்து தூங்கியிருக்கிறார்.

The night manager in US was arrested by the police because of his strange behavior

இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அடுத்த நாள் காலை சுமார் 5 மணியளவில் அவருக்கு ஏதோ சரியில்லாதது போல இருந்திருக்கிறது. உடல் முழுவதும் குளிர் பரவ தொடங்கியுள்ளது. நேரம் ஆக ஆக குளிர் மேலும் அதிகரித்து உடல் விறைத்து போகும் அளவுக்கு சென்றிருக்கிறது. கால் மட்டும் தனியே கழன்று போவது போலவும், காலிலிருந்து வித்தியாமாக திரவம் ஒழுகுவதை போலவும் தோன்றியிருக்கிறது. உடனடியாக எழுந்து பார்திருக்கிறார். நல்லவேலை அது வெறும் கனவுதான்.

எனவே மீண்டும் படுத்து தூங்கியிருக்கிறார். ஆனால் கால் விரல்கள் ஈரமானதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது ஓட்டலின் நைட் மேனேஜர் 52 வயதான டேவிட் நீல் இவரது கால் விரல்களை வாயில் வைத்து உறிஞ்சிக்கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்து அலறிய அவர் உடனடியாக அங்கிருந்து அவரை வெளியேற்றியிருக்கிறார். அடுத்தநாள் அவர் தனது அறையை காலி செய்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து ஓட்டலில் தங்கியிருந்தவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் தற்போது நைட் மேனேஜர் டேவிட் நீல்-ஐ கைது செய்துள்ளனர். விசாரணையில் மேனேஜர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதை ஏன் அவர் செய்தார் என்பதை தெளிவாக கூறவில்லை. மட்டுமல்லாது ஓட்டலில் தங்கியிருந்தவரின் அறையில் புகை வாசனை எழுந்ததாகவும் எனவேதான் தான் அறையினுள் சென்றதாகவும் கூறியுள்ளார். இவர் உள்ளே நுழைந்த அறையில் அப்படி எந்த புகையும் ஏற்படவில்லை என்று பக்கத்து அறையில் தங்கியிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

எனவே நீல் பொய் சொல்லியிருப்பது தெளிவாக தெரிந்திருக்கிறது. அதேபோல நீல் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தினத்தில் மது போதையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர் இதேபோல பல அறைகளில் திருட்டுத்தனமாக நுழைந்து பல விலைமதிப்பற்ற பொருட்களை திருடி சென்றுள்ளதாக ஏற்கெனவே புகார்கள் இருந்துள்ளன. இதனையடுத்து தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நைட் மேனேஜராக வேலை செய்த ஒருவர் திருட்டுத்தனமாக வாடிக்கையாளர் அறையில் நுழைந்து அவரது காலை உறிஞ்சிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+