எரியும் நெருப்பில் எண்ணெய்.. பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியை நிறுத்தியது அமெரிக்கா! காசா மக்கள் தவிப்பு
நியூயார்க்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான கூடுதல் நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகளும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன. ஆனால், போர் பல்வேறு நாடுகளுக்கு நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக செங்கடல் பகுதியில் வரும் சரக்கு கப்பல்களை ஈரானின் ஹவுதி படைகள் தாக்குவதால், அமெரிக்காவும், பிரிட்டனும் ஈரான் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு இருநாடுகளும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என ஈரான் எச்சரித்துள்ளது. எனவே மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
இப்படி இருக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான கூடுதல் நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இஸ்ரேல் மீதான தாக்குதிலில் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேலில் 9 மாதங்கள் முதல் 80 வயது வரையிலான 3,000 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவால் தாக்கப்பட்டனர். பல பெண்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சுமார் 1,405 பேர் உயிரிழந்தனர், மேலும் 200 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகமைக்கான ஊழியர்கள் 12 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஐநா விரிவான விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து ஏற்கெனவே ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பாலஸ்தீனத்திலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை செய்ய நிதி அவசியமாக இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் ஐநாவுக்கான நிதி வெட்டை அமெரிக்கா அறிவித்திருப்பது திட்டமிட்ட பழிவாங்கும் செயல் என பாலஸ்தீனம் விமர்சித்திருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications