இறக்குமதிக்கு கண்டபடி வரி போட்ட டிரம்ப்.. முட்டைக்காக கையேந்தும் அமெரிக்கா.. பழி வாங்கிய நாடுகள்
நியூயார்க்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கண்டபடி வரி போட்டு வருகிறார்.. மற்ற நாடுகள் எல்லாம் அமெரிக்காவிடம் பாரபட்சமாக நடப்பதாக கூறி வரியை கடுமையாக்கினார். இந்த சூழலில் பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க ஐரோப்பிய நாடுகளிடம் முட்டைக்காக கையேந்தும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் அவர் தரும் ட்விஸ்ட்டுகள் உலக நாடுகளை ஆடிப்போக வைத்துள்ளது. எங்கள் நாட்டின் பொருட்களுக்கு எந்த நாடுகள் எல்லாம் அதிக வரி விதிக்கின்றனவோ அந்த நாடுகளுக்கு எல்லாம் கடுமையான வரி விதிப்பேன் என்று அறிவித்தார். அதன்படியே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்து அதிரடி காட்டி வருகிறார்கள்.

அண்டை நாடுகள் பாதிப்பு
டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகள் பல கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் குறிப்பாக சொல்வது என்றால், அமெரிக்காவின் அண்டை நாடான கனடா, மெக்சிகோவுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதேபோல் அமெரிக்கா உடன் நட்புறவுடன் உள்ள ஐரோப்பிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
முட்டை தட்டுப்பாடு
கூடுதல் வரிகள் மூலம் இறக்குமதியை கடுமையானதாக மாற்றி வைத்துள்ளது, சில பொருட்களை என்ன விலை கொடுத்தாவது இறக்குமதி செய்தாக வேண்டிய நிலையில் உள்ளது. அந்த வரிசையில் முட்டை இருக்கிறது. முட்டை தட்டுப்பாடு காரணமாக, அயல்நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல்
அமெரிக்கா முழுவதும் அண்மையில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவியது. இதன் காரணமாக 15 கோடிக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், நோய்வாய்ப்படும் கோழிகளை உடனே அழிக்க வேண்டும் என பண்ணையாளர்களை அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்காவில், முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
முட்டை வாங்க கட்டுப்பாடு
இதன் காரணமாக முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் தற்போது முட்டை விலை கிட்டத்தட்ட 65 சதவீதம் உயர்ந்துவிட்டது. மேலும் 41 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது. முட்டை பற்றாக்குறை காரணமாக, அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில், வாடிக்கையாளர்கள் வாங்கும் முட்டை எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஓட்டல்கள் எல்லாம் முட்டையை வைத்து செய்யக்கூடிய உணவு ரகங்கள் இல்லை என்று அறிவித்து வருகின்றன.
கையேந்தும் அமெரிக்கா
முட்டை பற்றாக்குறையை சமாளிக்க அயல்நாடுகளில் இருந்து முட்டை இறக்குமதியை அதிகரிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அதிக அளவில் முட்டைகளை ஏற்றுமதி செய்யுமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.
கைவிட்ட நாடுகள்
போலந்து, பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு கூடுதல் முட்டைகளை ஏற்றுமதி செய்ய முடியாது என கைவிரித்து விட்டன. இதற்கு காரணம் டிரம்ப் தங்கள் நாட்டின் மீது விதித்த கூடுதல் வரி விதிப்பை அந்த நாடுகள் காரணமாக என்று கூறவில்லை என்றாலும், பறவை காய்ச்சல் தாக்கம் மற்றும் ஈஸ்டருக்கு முன்னதாக வளர்ந்து வரும் உள்நாட்டு தேவை காரணமாக உபரியாக முட்டை இல்லை என்று அந்நாடுகள் கைவிரித்துவிட்டன.












Click it and Unblock the Notifications