52 இடங்களை குறி வைத்துள்ளோம்.. புனித தலங்களும் சேர்த்துதான்.. ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
ஈரானில் இருக்கும் புனித தளங்களை தாக்குவதற்கு கூட அமெரிக்கா தயாராக இருக்கிறது, இதற்காக 52 இடங்களை குறி வைத்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: ஈரானில் இருக்கும் புனித தளங்களை தாக்குவதற்கு கூட அமெரிக்கா தயாராக இருக்கிறது, இதற்காக 52 இடங்களை குறி வைத்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா டிரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு போர் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார் .

ஈரான் செயல்
அமெரிக்காவை திருப்பி தாக்க ஈரான் திட்டமிட்டு வருகிறது. ஈரானின் இந்த திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில். ஈரானில் இருக்கும் புனித தளங்களை தாக்குவதற்கு கூட அமெரிக்கா தயாராக இருக்கிறது, இதற்காக 52 இடங்களை குறி வைத்துள்ளோம். நாங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்கிறோம்.

புனித தளம்
சிலர் இப்படி புனித தளங்களை தாக்க கூடாது. அது போர் குற்றம் என்று கூறுவார்கள். அது எனக்கு கவலை இல்லை. ஈரான் எங்கள் நாட்டின் மீது குண்டு வீசியுள்ளது. எங்கள் மக்களை கொன்றுள்ளது. எங்களை மக்களை கொடுமை படுத்தி இருக்கிறது.

எதிர்த்து தாக்கு
அவர்கள் அவ்வளவு செய்துள்ள போது, நாங்கள் திருப்பி தாக்க கூடாதா? அவர்களின் புனித தளங்களை தாக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்கள் நாங்கள் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த நினைக்க கூடாது.

மிக மோசம்
அப்படி நினைத்தால் அவ்வளவுதான். நாங்கள் மோசமாக திருப்பி தாக்குவோம். அதேபோல் ஈராக் எங்கள் படைகளை வெளியே அனுப்ப நினைக்க கூடாது. அப்படி முயற்சித்தால் ஈரானுடன் சேர்த்து ஈராக்கையும் கடுமையாக தாக்குவோம் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications