ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க பிளானா? திடீர் தாக்குதல் எதனால் நடந்தது? டிரம்ப் அதிரடி விளக்கம்!
ஈரான் மீது டிரோன் தாக்குதல் நடத்துவது ஏன்? அமெரிக்கா போர் செய்ய திட்டமிடுகிறதா என்பது குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: ஈரான் மீது டிரோன் தாக்குதல் நடத்துவது ஏன்? அமெரிக்கா போர் செய்ய திட்டமிடுகிறதா என்பது குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஈரான் மீது கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்கா டிரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் நேற்று நடந்த தாக்குதல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நேற்று நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு போர் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஈராக்கில் அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதர்களை, அதிகாரிகளை தாக்க திட்டமிட்டார்.
|
கொலை செய்யப்பட்டார்
அதை முறியடித்து, தற்போது அவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால் ஈரான் அரசை நாங்கள் எதிர்க்கவில்லை. ஈரான் அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அமெரிக்கா மீது கடுமையாக தாக்குதல் நடத்த சுலைமானி முயன்றார்.

என்ன முறியடிப்பு
அதைதான் முறியடித்து இருக்கிறோம். அதனால் வேறு வழி இன்று அவர் கொலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு போர் செய்ய ஆசை கிடையாது. ஈரான் உடன் போர் செய்ய எங்களுக்கு எந்த விதமான விருப்பமும் கிடையாது.

போர் இல்லை
நான் நேற்று நடத்திய தாக்குதல், தற்காப்பு தாக்குதல். அதுவும் கூட போரை நிறுத்துவதற்காக செய்யப்பட்ட தாக்குதல்தான். எங்களுக்கு போர் மீது ஆர்வம் கிடையாது. ஈரான் அரசை மாற்றவும் விருப்பம் இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications