அடேங்கப்பா.. இப்படி ஒரு சோகம் யாருக்கும் வரக்கூடாது! உலகிலேயே அதிர்ஷ்டமற்ற நபர்கள் இவர்கள்தானாம்
நியூயார்க்: வாழ்க்கையில் எல்லோருக்கும் கஷ்டம் வரத்தான் செய்யும். ஆனால் ஒருமுறை இரண்டுமுறை வந்தால் பரவாயில்லை.. கஷ்டமே வாழ்க்கை என்றால் எப்படி? அப்படியான சம்பவத்தைதான் சிலர் எதிர்கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்கள் அதிர்ஷ்டமற்றவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.
ஃப்ரான் செலக்: இவர் ஒரு குரோவசிய இசை ஆசியரியர். உலகின் மிகவும் பழமையான மொழிகளில் இதுவும் ஒன்று. இதில் இசையை கற்பதற்கு உலகம் முழுவதும் ஆர்வலர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். இதுபோதுமே.. இசையை வைத்து கல்லா கட்டி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாமே! என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் ஆனால் அதுதான் இல்லை.

முதல் சம்பவம் ரயில் விபத்து. இவர் வேலை விஷயமாக உள்ளூர் ரயிலில் பயணித்திருக்கிறார். எதிர்பாராத விதமாக இவர் சென்ற ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் உயிரிழப்புகள் பல நடந்திருந்தாலும் இவர் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துக்கொண்டார். தலைக்கு வந்தது, தலைபாகையோடு போய்விட்டது என்று சந்தோசப்பட்ட இவருக்கு, அடுத்தடுத்த நடந்த சம்பவங்கள்தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்து: அதாவது இந்த ரயில் விபத்திற்கு பிறகு, அவர் ரயிலில் செல்வதையே தவிர்த்துவிட்டார். கொஞ்ச நாட்கள் கழித்து பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழந்திருக்கிறது. இதில் இவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டார். அதன் பின்னர் எங்கு சென்றாலும் கார்தான். ஆனால் காரும் அடுத்த சில நாட்களில் விபத்தில் சிக்கியது. அதிலிருந்தும் உயிர் தப்பிய அவர், சிறிய ரக விமானத்தை பயன்படுத்த தொடங்கினார். அதுவும் அடுத்த சில நாட்களில் விபத்தில் சிக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வைக்கோல் வைக்கப்பட்ட பகுதியில் விழுந்து தப்பித்துவிட்டார்.
லாட்டரி: WWE-ன் அண்டடேக்கருக்கு 7 உயிர்தான்.. ஆனால் நம்ம ஆள் ஃப்ரான் செலக்கு 17 உயிர் என்பதை போல மீண்டும் மீண்டும் செத்து பிழைத்து வந்திருக்கிறார். இறுதியாக இவருக்கு ரூ.8.38 கோடி மதிப்பிலான லாட்டரி டிக்கெட் பரிசு விழுந்திருக்கிறது. என்னதான் இவர் அதிர்ஷ்டமற்றவராக கருதப்பட்டாலும், 'அடிச்சான் பாரு அப்பாயிமெண்ட் ஆர்டரு' என்கிற டோனில், லாட்டரி டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு ஊருக்குள் இவர் சுற்றியதை பார்த்த மக்கள், உண்மையாகவே இவரை போல அதிர்ஷடம் கொண்டவர்கள் யாரும் இல்லை என்று பேசிக்கொண்டனர்.
காஸ்டிஸ் மிட்சோடாகிஸ்: லாட்டரியால் அதிர்ஷ்டமானவர் என்று அழைக்கப்பட்ட ஃப்ரானுக்கு அப்படியே நேர் எதிராக, லாட்டரியால் அதிர்ஷ்டமற்ற நபர் என்கிற பெயரை பெற்றவர்தான் காஸ்டிஸ் மிட்சோடாகிஸ். கிரேக்க நாட்டின் திரைப்பட தயாரிப்பாளரான இவர் ஒரு சிறிய ஸ்பெயின் கிராமத்தில் வசித்து வந்திருக்கிறார். அவரது கிராமத்தை சேர்ந்தவர்கள் லாட்டரிகளை வாங்கியிருக்கின்றனர். ஆனால் இவர் மட்டும் வாங்கவில்லை.
இந்த ஊரில் லாட்டரியை பல்க்காக வாங்கி, அதில் யாருக்கு பரிசு கிடைக்கின்றதோ, அதை அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள். பரிசு கிடைக்கவில்லை எனில் பணம் போய்விடும். எனவே எதுக்கு தேவையில்லாமல் பணத்தை வேஸ்ட் செய்ய வேண்டும் என, காஸ்டிஸ் மிட்சோடாகிஸ் லாட்டரியை வாங்கவில்லை. ஆனால் அன்றைக்கு என பார்த்து லாட்டரியில் பரிசு விழுந்துவிட்டது. கிராமத்தில் மக்கள் தொகை குறைவு என்பதால், பரிசு பங்கு அதிகமாக வழங்கப்பட்டது. இவர்தான் லாட்டரியை வாங்கவில்லையே.. எனவே இவருக்கு பங்கு கொடுக்கப்படவில்லை. இது மட்டும் கிடைத்திருந்தால் இன்றைய தேதிக்கு இவர் கோடீஸ்வரராக இருந்திருப்பார். எனவே இவர் அதிஷ்டமற்றவர் என்று குறிப்பிடப்படுகிறார்.
கடைசியாக இவர் செய்த உருப்படியான வேலை, பரிசு வென்ற மக்களின் மகிழ்ச்சியை கேமரா கொண்டு பதிவு செய்ததுதான்.
ஹென்றி ஜிக்லாண்ட்: 20 ஆண்டுகளாக இவரது உயிரை காப்பாற்றி வந்த மரத்தை வெட்டியதன் மூலம் இவர் உயிரிழந்தார். ஹென்றியின் கதை ரொம்ப சிம்பிள். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு அப்பெண் போர் அடித்துவிடவே, வேறு பெண்ணை நோக்கி சென்றுவிட்டார். கழற்றிவிடப்பட்ட முதல் காதலி, துயரம் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டார். இது ஹென்றியை பாதிக்கவே இல்லை. அவர் தனது இரண்டாவது காதலியுடன் ஜாலியாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த முதல் காதலியின் தம்பி, ஹென்றியை போட்டுதள்ள பிளான் செய்திருக்கிறார். அதற்காக நாள் நேரம் குறிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நாளில் அதாவது 1903ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி ஹென்றியை அவரது தோட்டத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அடுத்த நொடி, தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். ஆனால் குண்டு, ஹென்றியை தாக்கவில்லை. அது அருகில் இருந்த மரத்தில் சொருகிக்கொண்டது. ஹென்றியும் தப்பிவிட்டார்.
பின்னர் 20 வருடங்கள் கழித்து, 1923ம் ஆண்டு ஹென்றி தனது இடத்தை விரிவாக்க மரங்களை வெட்ட தொடங்கியுள்ளார். அதில், தோட்டா துளைத்த மரமும் ஒன்று. மரம் சைஸில் பெரியதாக இருந்ததால், வெடி பொருட்களை வைத்து மரத்தை அழிக்க பிளான் செய்துள்ளார். வெடிப்பொருளும் வைக்கப்பட்டிருக்கிறது. இவர் மரத்திலிருந்து 50 அடி தொலைவில் நின்றிருக்கிறார். வெடியும் வெடித்திருக்கிறது.. இதில் மரத்தில் சொருகியிருந்த குண்டு, நேராக பாய்ந்து வந்து ஹென்றியின் தலையை துளைத்திருக்கிறது. ஹென்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
உலகில் மிக மிக மெதுவாக சென்ற துப்பாக்கி குண்டு இதுவாகத்தான் இருக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பிறகு சரியாக பழிவாங்கப்பட்ட நபராக ஹென்றி இருக்கிறார். எனவே, இவரும் துர்திஷ்டசாலியாக அறியப்பட்டிருக்கிறார்.
அதிர்ஷடம், துர்திர்ஷ்டம் என்பதெல்லாம் மற்றவர்களின் பார்வையில்தான். உண்மையில் மேற்குறிப்பிட்டவர்கள் நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார்கள். எனவே அவர்களை பொறுத்தவரை தாங்கள் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள்தான்.












Click it and Unblock the Notifications