ரத்த நிறமாய் மாறும் நிலவு.. இந்த தேதியில் தூங்காதீங்க! நாசா சொல்லும் அட்வைஸ்
நியூயார்க்: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 13ம் தேதி நள்ளிரவு தொடங்கி, 14ம் தேதி அதிகாலை வரை நீடிக்கிறது. தூங்காமல் வானத்தை பார்த்தால் இந்த சந்திர கிரகணத்தை முழுமையாக ரசிக்க முடியும் என்று நாசா கூறியிருக்கிறது. இது இந்தியாவில் தெரியுமா? எப்போது பார்க்கலாம்? என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.
சந்திர கிரகணத்தின்போது நிலவு ரத்த சிவப்பாக மாறும். இது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக, ரம்மியமாக, இயற்கையின் அதிசயமாக இருக்கும்.

சந்திர கிரகணம் என்றால் என்ன?:
சூரியனை பூமி சுற்றுகிறது. பூமியை நிலவு சுற்றுகிறது. இது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில்.. அதாவது முதலில் சூரியன் அடுத்து பூமி, கடைசியாக நிலவு வருவதைத்தான் நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்த நேரத்தில் சூரியனின் ஒளி நிலவு மீது விழாது. ஆனால், பூமி மீது விழுந்து நிலவுக்கு எதிரொலிக்கும். இதனால் நிலவு ரத்த நிறத்தில சிவப்பாக தோன்றும். இதைத்தான் சந்திர கிரகணம் என்று கூறுகிறார்கள்.
பாதி கிரகணம் நடக்கும் நேரத்தில் இப்படி தெரியாது. முழு கிரகணத்தின்போதுதான் இது தெரியும்.
எப்போது தோன்றும்?:
இது இந்தியாவில் தெரியாது. ஏனெனில் கிரகணம் நடக்கும்போது இந்தியாவில் பகல் பொழுதாக இருக்கும். அதனால்தான் இந்தியாவில் எங்கு இருந்தாலும் இதை பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்காவிலிருந்து பார்க்க முடியும். மார்ச் 13ம் தேதி இரவு 10.57 மணிக்கு இந்த கிரகணம் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக நிலவு மறைந்துக்கொண்டே வந்து கடைசியில் அடுத்த நாள் அதிகாலை, அதாவது மார்ச் 14ம் தேதி அதிகாலை 2.31க்கு முழு சந்திர கிரகணம் தெரியும். அப்போது நிலவு சிவப்பாக இருக்கும்.
சந்திர கிரகணத்தின்போது என்ன செய்ய கூடாது?:
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சில கிரகணத்தின்போது சாப்பிடாமல் இருப்பார்கள். ஒவ்வொரு மதத்திலும் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், உங்களுக்கு பசி எடுத்தால் சாப்பிடலாம். கிரகணத்தின்போது இதை செய்யக்கூடாது என்றோ, இதை செய்ய வேண்டும் என்றோ எந்த மருத்துவர்களும் எதையும் சொல்லவில்லை. கர்ப்பினியாக இருப்பவர்கள் வெளியில் வரக்கூடாது என்று சிலர் கூறுவார்கள். உங்களுக்கு வெளியில் போக தோன்றுகிறது என்றால் உதவிக்கு ஒருவரை அழைத்துக்கொண்டு தாராளமாக வெளியே போகலாம்.
தொடக்தக்தில் நமக்கு நிலவு பற்றி அவ்வளவாக தெரியாது. நிலவு என்றால் என்ன? அது நம்மை சுற்றுகிறதா? நாம் அதை சுற்றி வருகிறோமா? போன்ற விஷயங்கள் தெரியாது. அறிவியல் வளராத காலம் அது. எனவே சில பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. அதை இப்போதும் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications