ரஷ்யா போரை நிறுத்த இவ்வளவு ஆர்வம் ஏன்? டிரம்பின் பிளான் இதுதானாம்! உக்ரைன் இப்படியா ஏமாறனும்!
நியூயார்க்: ரஷ்ய போரை நிறுத்த டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கு காரணம், உக்ரைனுக்காக இதுவரை அமெரிக்கா செய்த செலவுகள், உதவிகள் என சேர்த்து $15 பில்லியன் திரும்ப இருப்பதுதான் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே முதல் உலகப்போர் முடிந்த பிறகு ஜெர்மன் பல வருடங்களாக மறைமுகமாக அமெரிக்காவுக்கு நட்ட ஈடுக்கு கொடுத்திருக்கிறது. அதற்கு இணையான தொகைதான் இந்த 15 பில்லியன் அமெரிக்க டாலர்.

ரஷ்யாவுக்கும் உக்கிரைனுக்கும் இடையே தொடங்கப்பட்ட போருக்கு முக்கிய காரணமே அமெரிக்காதான். அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் உக்கரைன் இணைய முயன்ற போது அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ரஷ்யா ஏன் எதிர்ப்பு தெரிவித்தது? உக்கிரைன் ஏன் நேட்டோவில் இணைய முயன்றது? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமெனில் சோவியத் காலத்திற்குதான் போக வேண்டும்.
சோவியத் ரஷ்யா இருந்த பொழுது, அது உலகின் மிக வலுவான நாடுகளில் முதன்மையான நாடாக இருந்தது. எனவே இந்நாட்டை எதிர்கொள்ள அமெரிக்கா உருவாக்கிய கூட்டமைப்புதான் நேட்டோ. ஆனால் இப்பொழுது சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா மட்டுமே மிஞ்சி இருக்கிறது. இருந்தும் நேட்டோ கலைக்கப்படாமல் இன்றுவரை தொடர்கிறது. இதில் பல நாடுகள் உறுப்பினராக இணைந்துள்ளன. பெரும்பாலும் அமெரிக்காவின் கட்டாயத்திலேயே இந்த நாடுகள் உறுப்பினராக உள்ளன. அப்படிதான் உக்கரைனும் இதில் இணைய முயன்றது.
ஆனால் ரஷ்யாவுக்கு பக்கத்து நாடுதான் உக்ரைன். ஒருவேளை உக்கரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் ரஷ்யாவுக்கு தலைவலி. காரணம் நேட்டோ படைகள் உக்கரைன் எல்லையில் நிற்கும். அதாவது ரஷ்யாவின் எல்லையில். உக்கரைனும்-ரஷ்யாவும் பக்கத்து பக்கத்து நாடுகள் என்பதால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு இது நேரடி அச்சுறுத்தல்.
எனவே நேட்டோவில் இணைய கூடாது என உக்ரைனுக்கு ரஷ்யா படித்து படித்து அட்வைஸ் செய்தது. ஆனால் உக்ரைன் மசியவில்லை. நேட்டோவில் இணைய முயன்றது. இதுதான் போரின் தொடக்கப் புள்ளி. பொறுத்து பார்த்த ரஷ்யா, இனியும் வேலைக்கு ஆகாது என்று போரில் குறித்தது. கடத்த 2022ஆம் ஆண்டு போர் தீவிரமடைந்தது. தற்போது வரை போரை நிறுத்த உக்கரைன் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் ரஷ்யா போரை நிறுத்த முன் வந்திருக்கிறது.
இந்த விவகாரங்கள் ஒரு பக்கம் இருக்கையில் அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப், போர் நிறுத்தத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்குக் காரணம் உக்கரைனில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டும் நோக்கம்தான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
அதாவது உக்ரைன் தனது மொத்த கனிம வளங்களில் வரும் வருமானத்தில் 50 சதவீதத்தை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்றும், கனிம ஏற்றுமதியில் அமெரிக்க நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மட்டுமல்லாது, உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்க செய்த செலவுகளுக்கு ஈடாக 15 பில்லியன் அமெரிக்க டாலரை திருப்பி கேட்டிருக்கிறார் டிரம்ப்.
முதல் உலகப்போர் காலகட்டத்தில் இதுபோன்று ஜென்மனிடம் அமெரிக்கா மறைமுகமாக பல வழிகளில் பணத்தை வசூலித்து இருக்கிறது. இப்பொழுதும் இதே பாணியை பின்பற்றி உக்ரைனிடமிருந்து கறக்க பார்க்கிறது.
இன்றைய சூழலில் உக்ரைனில் சுமார் 15 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கனிமங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை போர்ஸ் பத்திரிக்கை கணக்கிட்டு செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
இதில் நிலக்கரி மட்டும் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலும், டைட்டானியம் மற்றும் ஸ்டீல் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலும் இருக்கிறது.
ஆக போர் நிறுத்தம் கொண்டு வந்து உக்ரைனில் உள்ள கனிம வளங்களை கடனை சுட்டிக்காட்டி சுரண்டுவதுதான் அமெரிக்க அதிபர் டிரம்பின் நோக்கமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications