ஜெலன்ஸ்கியுடன் எலான் மஸ்க்கை பேச வைத்த ட்ரம்ப்! தலைகீழாய் மாறும் உக்ரைன்-ரஷ்யா போர்க்களம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்கை எனது தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பில் அமர வைப்பேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். தற்போது ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான உரையாடலின் போது, எலான் மஸ்க்கையும் ட்ரம்ப் பேச வைத்திருக்கிறார். இந்த உரையாடல், எலான் மஸ்க்குக்கு முக்கிய பதவி, உக்ரைன்-ரஷ்ய போரின் முடிவு என இரண்டு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட உடனேயே முதல் ஆளாய் வந்து நின்று சப்போர்ட் செய்தவர்தான் எலான் மஸ்க். பொது மேடைகளில ட்ரம்புக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வது, பிரசாரத்திற்கு தேவையான நிதியை வாரி வழங்கியது என ட்ரம்பின் தளபதியாக எலான் மஸ்க் நின்றிருந்தார். இதற்கு நிச்சயம் கைமாறு செய்வதாக அறிவித்த ட்ரம்ப், எலானுக்கு அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார்.

எலான் மஸ்க் எதிர்பார்த்தபடி, ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதின் தொடங்கி சீன அதிபர் ஜி ஜிங்பிங் வரை ட்ரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த லிஸ்ட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இருந்தார். ஜெலன்ஸ்கி போன் செய்து வாழ்த்துகளை பரிமாரிக்கொண்ட தருணத்தில், ட்ரம்ப் அருகே எலான் மஸ்க்கும் இருந்தார். அமெரிக்கா என்னதான் ஜெலன்ஸ்கிக்கு உதவியாக இருந்தாலும், எலான் மஸ்க்கும் ஜெலன்ஸ்கிக்கும் அவ்வளவாக ஒத்துப்போகவில்லை.
ஜெலன்ஸ்கி கேட்கும் உதவிகளை மஸ்க் பல முறை விமர்சித்துள்ளார். இப்படி இருக்கையில் இவர்கள் இருவரையும் ட்ரம்ப் பேச வைத்திருப்பது, இரண்டு விஷயங்களை உணர்த்திருக்கிறது. ஒன்று எலானுக்கு வழங்கப்பட உள்ள முக்கிய பொறுப்பு. எலானுக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்று பரவலாக எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. தற்போது ஜெலன்ஸ்கியுடன், எலானை பேச வைத்ததன் மூலம், எலான் மஸ்குக்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதை ட்ரம்ப் உறுதி செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நாட்டு அதிபர், மற்றொரு நாட்டு அதிபருடன் பேசும் போது அவ்வளவு சீக்கிரம் மூன்றாவது நபரை பேச சொல்ல மாட்டார்கள். ஆனால் ட்ரம்ப் அதை செய்திருக்கிறார்.
இதன் மூலம் எலானை வெள்ளை மாளிகை ஆலோசகராக்க ட்ரம்ப் முடிவெடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மறுபுறம், தான் பதவிக்கு வந்தால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடித்துவிடுவேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். ஏற்கெனவே போர் முனையில் செல்போன் நெட்வொர்க் முடக்கப்பட்ட இடங்களில் ஸ்டார்லிங்க் செற்கைகோளை கொண்டுதான் நெட்வொர்க் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடுகளை கொஞ்சம் தீவிரமாக்கி, போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும் இந்த உரையாடல் மூலம் திட்டமிட்டிருக்காலம். இது உக்ரைன்-ரஷ்யா போர்க்களத்தை தலைகீழாய் மாற்றும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications