அமெரிக்காவில் தங்கியிருந்த 5 லட்சம் பேரின் தலையெழுத்தை மாற்றிய டிரம்ப்! அடுத்த டார்கெட் இந்தியர்களா?
நியூ யார்க்: அமெரிக்காவில் வசித்து வரும் வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 5,32,000 பேருக்கு அளிக்கப்பட்டு இருந்த சட்ட பாதுகாப்பை ரத்து செய்து வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 30 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இல்லையெனில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். நாடு கடத்தும் உத்தரவை டிரம்ப் தீவிரமாக அமல்படுத்தியிருப்பது அங்கு ஆவணங்கள் இன்றி வசிக்கும் இந்தியர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவேன் என அறிவித்த டிரம்ப், அதற்கான நடவடிக்கைளிலும் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரை நாடு கடத்தினார். அதேபோல வரி விதிப்பு கொள்கையிலும் கடும் கெடுபிடி காட்டி வருகிறார்.

சட்டப்பூர்வ அனுமதி ரத்து
இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், வரிகளின் அரசன் என்றும் விமர்சித்து வரும் டிரம்ப், வரும் 2 ஆம் தேதி முதல் இந்தியா எந்த அளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு இந்திய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டும் இன்றி சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிக வரியை விதித்து வருகிறார். இப்படியாக டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் தங்கி கொள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டு இருந்தவர்களில் லட்சக்கணக்கானவர்களின் அனுமதியை ரத்து செய்து டிரம்ப் அதிரவைத்து வருகிறார். அதாவது, உள்நாட்டு போர், வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கியூபா, ஹைதி, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நுழைந்தனர். இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் 2022 ஆம் ஆண்டு சிஎச்என்வி என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு பிறகு
இதன்படி, நான்கு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் 2 ஆண்டுகள் சட்ட அனுமதியுடன் தங்கி கொள்ள முடியும். ஆனால், அமெரிக்க மக்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக குற்றம் சாட்டி வந்த டொனால்டு டிரம்ப், தற்போது மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக, ஜோ பைடன் நிர்வாகம் அளித்து வந்த தற்காலிக சட்டப்பூர்வ அனுமதியை ரத்து செய்துள்ளது.
டிரம்பின் இந்த நடவடிக்கை காரணமாக கியூபா, ஹைதி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு பிறகு இவர்களுக்கான சட்டபூர்வ அனுமதி போய்விடும். அதற்குள் தாமாக வெளியேற விட்டால் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் டிரம்ப் நிர்வாகம் எச்சரித்து இருக்கிறது.
இந்தியர்கள் பலரும் அச்சம்
இதற்கிடையே, அமெரிக்காவில் 4.8 மில்லியன் இந்தியர்கள் குடியேறி இருக்கலாம் என்று ஆய்வு சொல்கிறது. அங்கு வசிக்கும் பல இந்தியர்களும் ஹெச் -1 பி விசா, கிரீன் கார்டு, அல்லது குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள். அது போக சுமார் 3 லட்சம் பேர் ஆவணங்கள் இன்றியும் அதாவது, விசா காலம் முடிந்த பிறகோ அல்லது சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் புகுந்தோ வசிக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்தும் கொள்கையை தீவிரமாக கையில் எடுத்து இருப்பதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த அச்சம் அதிகரித்துள்ளது. ஜனவரி 2025ல் முதல் இந்தியா 388 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications