அவர கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கப்பா.. நோபல் பரிசு தரலைனா அசிங்கமாயிடும்! அழாத குறையாக பேசிய டிரம்ப்
சென்னை: அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால் அது அமெரிக்காவுக்கே ஒரு "பெரிய அவமானமாக" இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பாக பேசியுள்ளார். இந்த மாதம் நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், டிரம்ப் தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஊடக வெளிச்சத்தை மட்டுமே கொண்ட நபர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசை தர முடியாது என நார்வே நோபல் கமிட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , "எனக்கு அந்த பரிசை தருவார்களா? இல்லை. ஒரு சிறிய காரியம்கூட செய்யாத ஒருவருக்குத்தான் அதை கொடுப்பார்கள் என நினைக்கிறேன்..
ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு தரப்படாவிட்டால் அது எனக்கான அவமானம் இல்லை, நம் நாட்டுக்கான அவமானமாக இருக்கும். எனக்கு அந்த பரிசு தேவையில்லை, ஆனால் அமெரிக்காவுக்குத் தேவையாகும். ஏனெனில் நம் நாடு அதை பெற தகுதியானது," என்று தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப்
மேலும், "31 ஆண்டுகள் நீடித்த போர்களும் இருந்தன, 36 ஆண்டுகள் நீடித்த போர்களும் இருந்தன. அவை முடியாது என்று பலரும் கூறினர். ஆனால் நான் ஏழு பெரிய போர்களை முடிவுக்கு கொண்டுவந்தேன். முன்னதாக அந்த போர்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். நான் வந்த பிறகு ஏழு போர்கள் நிறுத்தப்பட்டு, பல்லாயிரக்காண மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்காகவே நான் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவன்," என்றும் வலியுறுத்தினார்.
நோபல் அமைதிப் பரிசு
2025ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜனவரியில் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து அவர் தன்னுடைய ஆட்சியில் ஆறு போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறி வருகிறார். எனினும் காஸா மற்றும் உக்ரைனில் போர்கள் இன்னும் முடிவடையவில்லை. மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் தன் தலையீட்டால்தான் சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை
" இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் நான் வர்த்தக அழுத்தத்தைப் பயன்படுத்தினேன். ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என்று சொன்னவுடன் அவர்கள் தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்," என்று டிரம்ப் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் கனவுடன் இருந்தது இது முதல் முறை அல்ல. தனது முந்தைய ஆட்சி காலத்திலேயே தாலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்தும் அவர் அந்த விருதை பெற முயன்றார். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
நோபல் கமிட்டி
இந்நிலையில், டிரம்பின் முயற்சி குறித்து நார்வே நோபல் கமிட்டி கடுமையான பதிலை அளித்துள்ளது. அதன் செயலாளர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகன், "ஊடகங்களின் வெளிச்சம் அல்லது பொதுமக்களின் அழுத்தம் எங்கள் முடிவுகளை பாதிக்காது. ஒவ்வொரு பரிந்துரையும் அதன் தனித்துவமான தகுதிகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும்," என்று கூறியுள்ளார். இதனால், டிரம்ப் எத்தனை முறை தன்னைத் தானே "அமைதிக்கான வீரன்" என்று புகழ்ந்தாலும், நோபல் கமிட்டி தனது நிலைப்பாட்டை மாற்றும் வாய்ப்பு இல்லை என்பதைக் குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள முடிவில் டிரம்ப் பெயர் இடம்பெறுமா அல்லது ஏமாற்றமே மிஞ்சுமா என்பதே இப்போது உலக அரசியல் வட்டாரங்கள் கவனித்து வரும் முக்கிய கேள்வியாகியுள்ளது.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications