ரஷ்யா கூட சேர்ந்து பிரிக்ஸ் கரன்சிக்கு போனால்.. 100% வரி.. இந்தியாவுக்கும் டிரம்ப் வார்னிங்
நியூயார்க்: அமெரிக்காவுக்கு போட்டியாக 'பிரிக்ஸ்' அமைப்பு இயங்கி வருகிறது. பிரிக்ஸ் நாடுகளுக்கு என பொதுவான கரன்சியை களமிறக்க ரஷ்யா யோசித்து வருகிறது. அப்படி செய்தால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். பிரிக்ஸில் இந்தியாவும் உறுப்பினர் என்பதால், நாமும் பாதிக்கப்படுவோம்.
சரி பிரிக்ஸ் என்றால் என்ன என்று பார்ப்போம். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்ததுதான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. இப்போது இதில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் புதியதாக சேர்ந்திருக்கின்றன. இப்படி கூட்டு சேர்வதன் மூலம், உறுப்பினர்களாக உள்ள நாடுகளிடம் நாம் எளிதாக வர்த்தகத்தை செய்துக்கொள்ள முடியும்.

உதாரணமாக, ரஷ்யாவும் இந்தியாவும் பிரிக்ஸில் உறுப்பினர்கள். எனவே ரஷ்யா நமக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை கொடுத்து வருகிறது. இப்படி பல சமாச்சாரங்களில் பிரிக்ஸ் உதவுகிறது.
எல்லாம் நல்லாதானே இருக்கு? அப்புறம் என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்கலாம். பிரச்சனை அமெரிக்கா வடிவில் இப்போது வந்திருக்கிறது.
சவுதி அரேபியாவிலிருந்தும் இந்தியா கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்குகிறது. இதற்கு நம்மூர் ரூபாயில் காசு கொடுத்தால் சவுதி வாங்காது. எனவே அமெரிக்க டாலரில்தான் கொடுக்க வேண்டும். அமெரிக்க டாலருக்கு நாம எங்க போகுறது? எனவே ரூபாயை வைத்து டாலரை வாங்கி, அதை சவுதியிடம் கொடுக்கிறோம்.
சரி நாம ஒரு ரூபாய் கொடுத்தா.. 1 டாலர் கொடுக்கனும்தானே? அதுதான் கிடையாது. அமெரிக்காவின் இன்றைய 1 டாலரின் மதிப்பு 80 ரூபாய். ஆக டாலர் வாங்க நாம நிறைய காசை இறைக்கனும். இந்தியாவுக்கு மட்டும் கிடையாது, எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும்.
எனவே பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ரஷ்யாவும், சீனாவும் டாலருக்கு பதில் வேறு ஒரு கரன்சியை உருவாக்க திட்டமிட்டார்கள். இது டாலரை போல ரொம்ப காஸ்ட்லி கிடையாது. இந்த 'பிரிக்ஸ்' கரன்சியை வைத்து மேலே சொன்ன 10 நாடுகளிடம் நம்மால் வர்த்தகம் செய்ய முடியும். நாம டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. சவுதியிடம் பெட்ரோல் வாங்க பிரிக்ஸ் கரன்சியை பயன்படுத்தலாம்.
இதெல்லாம் நேத்து வரை யோசித்து வைக்கப்பட்ட திட்டங்கள். ஆனால் இந்த திட்டத்தில் அமெரிக்கா தற்போது ஒரு லாரி மணலை அள்ளி கொட்டியுள்ளது.
நீங்க 'பிரிக்ஸ்' கரன்சியை பயன்படுத்தினால், நாங்கள் 'பிரிக்ஸ்' நாடுகளின் பொருட்களுக்கு 100% வரி விதிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். "பிரிக்ஸ் கரன்சி என்கிற பெயரிலோ, அல்லது வேறு ஏதாவது கரன்சியை அமெரிக்க டாலருக்கு மாற்றாக சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த முயன்றால் அந்த நாடுகள் 100% வரியை எதிர்கொள்ளும். அந்நாடுகளின் பொருட்கள் அமெரிக்காவில் விற்காது. எனவே வர்த்தகத்துக்கு அமெரிக்காவை விட்டுவிட்டு வேறு நாடுகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
அப்படி செய்தாலும் கூட அமெரிக்கா மாதிரி செல்வ செழிப்பான நாடு எதுவும் உங்களுக்கு கிடைக்காது" என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். (பிரிக்ஸில் இந்தியாவும் உறுப்பினர் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்)
இந்திய அரிசி அமெரிக்காவில் கிலோ 5 டாலருக்கு விற்கப்படுகிறது எனில், 100% வரி விதிக்கப்பட்டால் அரிசியின் விலை 10 டாலராக உயர்ந்துவிடும். இதனால் யாரும் அரிசியை வாங்க மாட்டார்கள். இதுதான் 100% வரி விதிப்பு என்று சொல்லப்படுகிறது.
சரி இந்தியாவுக்கு பிரிக்ஸ் கரன்சி குறித்த ஐடியா இருக்கிறதா? என்று கேட்டால், இப்போது வரை அப்படி எந்த ஐடியாவும் கிடையாது. பிரிக்ஸ் கரன்சி குறித்து 1 மாதத்திற்கு முன்னரே பேச்சு அடிபட்டது. அடுத்த 2வது நாள் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பிரிக்ஸ் கரன்சியை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். அமெரிக்க டாலரைதான் பயன்படுத்துவோம்" என்று தெளிவாக கூறிவிட்டார்.
இப்படி இருக்கையில் டிரம்பின் அறிவிப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?












Click it and Unblock the Notifications