Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளியே அனுப்பப்பட்ட ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால்.. வேலையிலிருந்தே நீக்கம்? எலான் மஸ்க் அதிரடி?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராய்டர்ஸ் ஊடகம் உள்ளிட்ட பிரபல சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளன.

நேற்று ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் நேற்று முறையாக நிறைவேற்றப்பட்டது.

முன்பு இந்த 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் போடப்பட்ட பின் அதில் இறுதி கையெழுத்து போடாமல் எலான் மஸ்க் நேரம் தாழ்த்தி வந்தார். இதற்கு எதிராக வழக்கு போடப்படும் என்று ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் மதிக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடுப்போம் என்று கூறி வந்தனர். அதே சமயம், ட்விட்டர் நிறுவனத்தை நான் மொத்தமாக வாங்க ரெடி. ஆனால் இதில் எத்தனை பொய்யான கணக்குகள் இருக்கிறது என்று கணக்கு காட்ட வேண்டும். எத்தனை பாட்கள் இருக்கின்றன என்று கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும். 20 சதவிகிதம் அளவிற்கு பாட் இருந்தால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மாட்டேன் என்று மஸ்க் குறிப்பிட்டார்.

டீலிங்

டீலிங்

இதன் காரணமாக ட்விட்டர் அதிகாரிகளுக்கும் - மஸ்க்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மஸ்க் வாங்குவதாக கூறி ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் அதில் இருந்து பின் வாங்கினால், அது மிகப்பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும். முக்கியமாக பங்கு சந்தையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்தையின் முடிவில் ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்க ஒப்புக்கொண்டார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதையடுத்து நேற்று ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் நேற்று முறையாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராகிறார் மஸ்க். இதையடுத்து பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியரான பராக், ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்குவதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இதை எப்படியாவது தடுக்க பார்த்தார்.

பங்குகள் விலை

பங்குகள் விலை

பங்கு விலைகளை மஸ்க்கிற்கு மட்டும் உயர்த்தி "பாய்சன் பில்" முறை மூலம் அழுத்தம் கொடுத்தார். அதோடு மஸ்க்கை போர்ட் மெம்பராக சேர்த்து கொள்கிறோம் என்றும் சமாதானம் செய்தார். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை. அதன்பின் ட்விட்டரில் இருக்கும் பாட் கணக்குகள் குறித்து மஸ்க் விளக்கம் கேட்ட போது இருவருக்கும் இடையில் அது பெரிய வாக்குவாதம் ஆகியது. இதில் மஸ்கின் வாட்ஸ் ஆப்பிற்கு பராக் கோபமாக மெசேஜ்களை அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

பராக் அக்ரவால்

பராக் அக்ரவால்

இந்த நிலையில்தான் ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராய்டர்ஸ் ஊடகம் உள்ளிட்ட பிரபல சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளன. சிஎப்ஓ உள்ளிட்ட மற்ற உயர் அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் தலைமையகத்தில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எலான் மஸ்க் நேற்றுதான் சென்றார்.

வேலை இழப்பு

வேலை இழப்பு

முன்னதாக மஸ்க் தனது ட்விட்டர் பயோவில் "Chief Twit" என்று மாற்றிவிட்டார். அதாவது நான்தான் இந்த நிறுவனத்தின் தலைவர் என்பதை உணர்த்தும் விதமாக அந்த மாற்றத்தை மஸ்க் செய்து இருந்தார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது ஒரு பக்கம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது போலவே சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, இவர் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் பலரை வேலையில் இருந்து தூக்க போவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் மஸ்க் வருகையை எதிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில்தான் ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பராக் அக்ரவால் இந்தியாவை சேர்ந்தவர். மஹாராஷ்டிராவில் வசித்து வந்த இவர் மும்பையில் இருக்கும் ஐஐடியில்தான் கம்ப்யுட்டர் சைன்ஸ் பிரிவில் பிடெக் படித்து இருக்கிறார். 2011ல்தான் ட்வீட்டரில் இவர் இணைந்தார். அங்கு தொடக்கத்தில் சாதராண எஞ்சினியராகவே இணைந்துள்ளார். 2016-2017ல் இவர் கொண்டு வந்த மாற்றங்கள் ட்வீட்டரை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நிறுவனத்தின் சிஇஓவாக பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+