Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலையை விட்டு தூக்குங்க! லிஸ்ட் எடுக்கும் எலான் மஸ்க்.. ட்விட்டரில் வேலையை இழக்கும் பலநூறு ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பலரை நீக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் நேற்று முறையாக நிறைவேற்றப்பட்டது. முன்பு இந்த 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் போடப்பட்ட பின் அதில் இறுதி கையெழுத்து போடாமல் எலான் மஸ்க் நேரம் தாழ்த்தி வந்தார்.

இதற்கு எதிராக வழக்கு போடப்படும் என்று ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக நிறுவனம் கைமாறியது.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் பொய்யான கணக்குகள்.. அதாவது பாட் கணக்குகள் குறித்த பட்டியலை கொடுத்தால் மட்டுமே அதை நான் வாங்குவேன் என்று மஸ்க் குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்காமல் அவர் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ட்விட்டர் நிறுவன டீலிங்கை முடிக்க மஸ்க் ஒப்புக்கொண்டார்.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் முதல் வேலையாக அதை உயர் அதிகாரிகளை வேலையில் இருந்து மஸ்க் நீக்கினார். ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். சிஎப்ஓ உள்ளிட்ட மற்ற உயர் அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் தலைமையகத்தில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 சிஇஓ பராக் அக்ரவால்

சிஇஓ பராக் அக்ரவால்

ட்விட்டர் உயர் அதிகாரிகளுடன் மஸ்க் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். முக்கியமாக பராக் உடன் மஸ்க் கடுமையாக மோதி வந்தார். இந்த நிலையில்தான் பராக் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நிலையில் பலரை வேலை நீக்கம் செய்கிறார். வேலை நீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியல் தயாராகி வருகிறது.

மஸ்க்

மஸ்க்

மஸ்க்கின் முடிவிற்கு ட்விட்டர் நிர்வாகிகள் பலர் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு கிளைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களை மஸ்க் வேலையில் இருந்து நீக்க உள்ளார். முன்னாள் சிஇஓ பராக் அக்ரவால் இது தொடர்பாக முன்பே எச்சரித்து இருந்தார். வேலை நீக்கம் தொடர்பாக முன்பே தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது. ட்விட்டர் ஊழியர்கள் இடையே இந்த சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊழியர்கள்

ஊழியர்கள்

குறைவான ஊழியர்களுடன் இந்த நிறுவனத்தை நடத்த மஸ்க் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இப்போது இருக்கும் ஊழியர்களில் 50 -70 சதவிகிதம் பேர் வரை வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் லிஸ்டை உடனே தயார் செய்யுங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேனேஜர்களுக்கு மஸ்க் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

நீக்கம் எப்படி?

நீக்கம் எப்படி?

முன்னதாக மஸ்க் தனது ட்விட்டர் பயோவில் "Chief Twit" என்று மாற்றிவிட்டார். அதாவது நான்தான் இந்த நிறுவனத்தின் தலைவர் என்பதை உணர்த்தும் விதமாக அந்த மாற்றத்தை மஸ்க் செய்து இருந்தார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் அதன் சிஇஓவாக அவர் பதவி ஏற்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிறுவனத்தின் உரிமை மட்டுமின்றி, நிறுவனத்தை நேரடியாக கண்காணிக்கும் பணிகளையும் அவரே செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக ட்விட்டர் நிறுவனம் மூலம் தடை செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் போன்ற உறுப்பினர்கள் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+