இன்றே கடைசி நாளாக கூட இருக்கலாம்! விமானம் சைஸ் விண்கல்.. ஆபத்தில் பூமி! நாசா வார்னிங்
நியூயார்க்: விமானம் சைஸ் கொண்ட இரண்டு விண்கற்கள், பூமியை மிக நெருக்கமாக நாளை கடந்து செல்ல இருக்கிறது என நாசா எச்சரித்துள்ளது. இதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட அது பூமியை தாக்கும் அபாயம் ஏற்படும்.
சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் சில பூமிக்கு நெருக்கமாகவும் வருகின்றன. இப்படி வரும் விண்கற்கள் குறித்து நாசா தொடர்ந்து ஆய்வு நடத்தி கண்காணித்து வருகிறது. இந்த விண்கற்களில் 2024 YC1 மற்றும் 2024 YQ2 என்கிற விண்கற்கள் நாளை பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது என்று நாசா கண்டுபிடித்திருக்கிறது. இந்த விண்கற்களின் பாதையில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

முதல் விண்கல் 2024 YC1. இது 120 அடி விட்டம் கொண்டது. ஒரு பயணிகள் விமானத்தின் சைஸ் கொண்ட இந்த விண்கல் சுமார் 10 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை மணிக்கு 33,258 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல இருக்கிறது. 10 லட்சம் கி.மீ என்பது நெடிய தூரமாக நமக்கு தோன்றலாம். ஆனால், இந்த தொலைவு நிலவை விட 28 மடங்கு தூரம்தான். இன்னும் புரியும்படி சொல்வதெனில்.. நமக்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளி கிரகம் 3 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. அப்படியெனில் 10 லட்சம் கி.மீ என்பது ரொம்ப நெருக்கம்.
இந்த கல் பூமியை தாக்கினால் அந்த பகுதியில் சுமார் 340 மெகா டன் டிஎன்டி வெடி பொருள் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு தாக்கம் உருவாகும். மட்டுமல்லாது கல் விழுந்த இடத்தில் 300 மீ ஆழத்திலும், 1.5 கி.மீ விட்டமும் அளவு கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகும். அதேபோல கல் விழுந்த இடத்தில் சுமார் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். கல் விழும்போது ஏற்படும் அதிர்வுகள் சூப்பர் சோனிக் வேகத்தில் அப்படியே பரவும்.
தரையில் விழுந்தால்தால்தானே இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும்? கடலில் விழுந்தால் பிரச்னை இல்லைதானே என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் கடலில் விழுந்தாலும் பஞ்சாயத்துதான். அதாவது, கல் விழுந்த இடத்திலிருந்து சுமார் 500 கி.மீ பரப்பளவுக்கு கடுமையான சுனாமி ஏற்படும். இது மட்டுமல்லாமல் காட்டு தீயும், எரிமலை வெடிப்பும் ஏற்படும். இது எல்லாம் சேர்ந்து வளிமண்டலத்தை புகையால் மூடிவிடும். இந்த புகை தாவரங்களை அழித்துவிடும்.
தாவரங்கள் அழிந்துவிட்டால் அதை நம்பி இருக்கும் சைவ உயிரினங்களும், அதை சாப்பிட்டு வாழும் அசைவ மிருகங்களும் செத்துப்போய்விடும். இது உணவு சங்கிலியின் உச்சத்தில் உள்ள நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இரண்டாவதாக உள்ள விண்கல் 2024 YQ2. இது முதல் விண்கல்லை விட அளவில் சிறியதுதான். வெறும் 80 அடி மட்டுமே கொண்ட இந்த விண்கல் சுமார் 32,000 கி.மீ வேகத்தில் 10 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை கடந்து செல்ல இருக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல, இந்த கல்லும் பூமியில் மோதினால் மனிதர்களாகிய நமக்கு சிக்கல்தான்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications