வங்கியில் 10 வருடமாக அரை நாள் மட்டுமே வேலை செய்த 2 பெண்கள்.. யாருமே கண்டுபிடிக்கவில்லை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வங்கியில் வேலை செய்யும் இரண்டு பெண்கள், தொடர்ந்து 10 வருடங்களாக தினமும் அரை நாள் தான் வேலை செய்திருக்கிறார்கள். இதை வங்கி நிர்வாகம் உள்பட யாருமே 10 வருடமாக கவனிக்கவில்லை என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

நம்மூர் வங்கியில் காலையில் 10 மணி முதல் ஒரு மணி வரையிலும், பிற்பகலில் ஒரு மணி நேரமும் என மொத்தமே 4 முதல் 5 மணி நேரம் தான் வங்கியில் பணம் போடுதல், எடுத்தல், செக் வைத்து பணம் எடுத்தல் போன்ற பணிகளை செய்ய முடியும். அதேநேரம் வங்கியில் போய் அந்த சேவைகளை மகிழ்ச்சியுடன் பெற்றுவிட முடியுமா என்றால் அவ்வளவு எளிதானது அல்ல. மனம் நொந்து தான் பல நேரங்களில் வரவேண்டியதிருக்கும்.

bank us

வங்கியில் உள்ள கூட்டத்தை பார்த்து தெறித்து ஓடிவந்தவர்கள் தான் அதிகம். நம்மூரில் வங்கி ஊழியர்கள் முழு நாளும் வேலை செய்ய வேண்டும். அரைநாளில் விடுப்பு என்றால் அதற்கு அனுமதி வாங்க வேண்டும். அடிக்கடி அரைநாள் விடுமுறை எடுக்க முடியாது. அதேபோல் வேலையில் டிமிக்கி அடிக்க முடியாது. இதுதான் வங்கி வேலையில் உள்ள எதார்த்தம்.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான செல்சியா எம் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்பவே முடியாத உண்மைக்கதையை பதிவிட்டுள்ளார். அவர் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய வங்கிக் கிளையில் இரண்டு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 10 வருடங்களாக அரை நாட்கள் வேலை செய்து வந்தார்களாம். இதுபற்றி விவரமாக பதிவிட்டுள்ளார். அதை கேட்கும் போது ஆச்சர்யமாகவும், திகைப்பூட்டும் வகையில் இருக்கிறது. இப்படி எல்லாமே இருப்பார்கள் என்று யோசிக்க வைத்துள்ளது,

செல்சியா எம் கேமரூன் வெளியிட்ட பதிவின் படி, எங்கள் ஊரில் உள்ள ஒரு வங்கி கிளையில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் 10 வருடங்களாக அரை நாள் மட்டுமே வேலை செய்து வந்துவிட்டு ஏமாற்றி வந்துள்ளார்கள். பெண்கள் என்பதால் இப்படி அவர்களால் அந்த வங்கியில் ஏமாற்ற முடிந்திருக்கிறது. வேலை நேரம் முடிவதற்கு முன்பே அவர்கள் வெளியேறி சென்றதை வங்கி மேலிடம் இந்த 10 வருட காலத்திதில் ஒருமுறை கூட கவனிக்கவே இல்லை.

தினமும் வேலைக்கு வரும் அந்த பெண்கள் மாலை 4 மணி வரை வங்கியில் இருக்க வேண்டும். அனால் அவர்கள் அரை நாள் ஷிப்ட் முடிந்தவுடன் வெளியேறுவார்கள். இதில் ஒரு பெண் ஷிப்ட் வழக்கமாக முடிக்கும் போது மற்றொருவர் முக்கிய வேலைகளுக்கு இருந்து உதவுவார். இப்படி இருவரும் மாறி மாறி மோசடி செய்து உதவி உள்ளனர். தொடர்ந்து 10 ஆண்டுகள் மோசடி செய்திருக்கிறார்கள்.

இப்படி மோசடி செய்த பெண்களில் ஒருவருக்கு ஒரு முறை அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக ஒருவர் விடுப்பில் இருந்தார். அவர்களுக்கு அப்போது நான் உதவி செய்து கொண்டிருந்தேன். மதிய உணவுக்குப் பிறகு நான் எனது வழக்கமான வேலைக்காக ஆபிஸ்க்கு திரும்பிச் செல்வேன். ஆனால் இன்னொரு பெண்ணின் கார் வங்கி கிளையில் இருக்க வேண்டிய நேரத்தில், ஆபிஸ்க்கு போகாமல் அங்கேயே நிறுத்தியிருப்பதை நான் பலமுறை பார்த்தேன். அவர்கள் இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

எங்கள் வங்கியில் பணியாற்றி இப்படி மோசடியில ஈடுபட்ட திருமண கடன் அதிகாரி, தன்னுடய உதவியாளருடன் சேர்ந்து மோசடி கடனும் வாங்குவார். அதை பயன்படுத்தி போதைப்பொருள் வாங்குவார். மேலும் அவரது மருமகள் மற்றும் மருமகன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் கடன்கள் எடுத்து மோசடி செய்வார்.' இப்படி மோசடி செய்த பெண்கள் இரண்டு பேரும் ஒரு கட்டத்தில் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் மீது மோசடி, பணம் பறித்தல், அதிகார துஷ்பிரயோகம் போற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+