டிரம்ப் செய்வது சரிதான்.. திமிரை பாருங்களேன்.. இந்தியா மீது பாய்ந்த உக்ரைன் ஜெலன்ஸ்கி.. அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியாவிற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு உள்ள நடவடிக்கைளை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆதரித்து உள்ளார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் தொடர்ந்து பொருளாதார உறவுகளைப் பேணும் நாடுகள் மீது, குறிப்பாக ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்கும் நாடுகள் மீது, இரண்டாம் கட்ட வரிகளை விதிக்க ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மத்தியில், அதன் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

Donald Trump India

ரஷ்யா இந்தியா உறவு

ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க போவதாக டிரம்ப் பலமுறை எச்சரித்து இருந்தார். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை அவர் தொடர்ந்ததால் இந்தத் தடைகளை விதிக்காமல் இருந்தார். ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது வரிகள் விதிப்பது சரியான யோசனை என்று ஜெலன்ஸ்கி கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் இருந்த படங்களைப் பற்றி கேட்டபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக அரசியலை "இருண்ட பக்கத்திற்கு" கொண்டு சென்றுவிட்டார், ஆனால் டிரம்ப்பின் வர்த்தக தடைகள் சரியானதே.

ரஷ்யாவுடன் ஒப்பந்தங்களைச் செய்யும் நாடுகள் மீது வரிகளை விதிக்கும் யோசனை சரியானதாகவே நான் கருதுகிறேன்" என்றார். மேலும், "ரஷ்யாவிடம் இருந்து எந்தவிதமான எரிசக்தியையும், வேறு எந்த ஒப்பந்தங்களையும் நாம் நிறுத்த வேண்டும். நாம் அவர்களைத் தடுக்க விரும்பினால், எந்த ஒப்பந்தங்களும் இருக்கக்கூடாது.. அப்போதுதான் ரஷ்யா போரை நிறுத்தும்" என்று அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யாவுடன் நெருக்கமாகும் இந்தியா

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் SCO அமர்வுக்கு முன்னதாக ஒன்றாகச் சிரித்துக்கொண்டிருந்தனர். மேலும், பிரதமர் மோடியும் புடினும் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காகச் சென்றபோது காரில் சுமார் 45 நிமிடங்கள் உரையாடினர்.

ஜெலன்ஸ்கியின் இந்தக் கருத்துகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டுக்கான சீனப் பயணத்தைத் தொடர்ந்து வந்தன. போர் தொடங்கியதிலிருந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மிகப்பெரிய வாங்குபவர்களாகத் திகழ்கின்றன. இதன் மூலம் ரஷ்யா சுமார் 985 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது என்று எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு உள்ள நடவடிக்கைகளை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆதரித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+