“இவங்கதான் தீவிரவாதத்தை பரப்புறாங்க!” ஐநா மாநாட்டில் இஸ்ரேலை சரமாரியாக குற்றம்சாட்டிய லெபனான்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்கவும், தீர்வு காணவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் வைத்து, "இவங்கதான் தீவிரவாதத்தை பரப்புகிறார்கள்" என்று இஸ்ரேல் மீது லெபனான் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே இருந்த போர் தற்போது, லெபனான் நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த போருக்கான தொடக்கமும் முடிவும், அமெரிக்கா கையில்தான் இருக்கிறது.

un middle east israel

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அடைக்கலம் தேடி மத்திய கிழக்கு பகுதிக்கு வந்தவர்கள்தான் ஜியோனிஸ்ட்டுகள் எனப்படும் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாம் பரவி இருக்க, இவர்கள் மட்டும் மாற்று மதத்தினராக இருந்தனர். இவர்களை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் அமெரிக்காவும், பிரிட்டனும் தங்க வைத்தது. இனி இதுதான் உங்கள் நாடு என்றும் சிறிய நிலப்பரப்பை ஜியோனிஸ்ட்டுகளுக்கு பிரித்து கொடுத்தது. இந்த சிறிய நிலப்பரப்புக்கு இஸ்ரேல் என்று பெயரிடப்பட்டது.

ஆனால் அப்போது தொடங்கி இப்போது வரை, இஸ்ரேல் பெரிய அளவுக்கு விரிவடைந்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேலாக மாற்றப்பட்டது. இதுதான் இன்று நடக்கும் போருக்கு தொடக்கப்புள்ளி. ஜியோனிஸ்ட்டுகளின் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் மேலும் தங்கள் நாட்டின் பரப்பை விரிவுப்படுத்த முயல, அதற்கு பாலஸ்தீன மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பில் உருவான ஆயுதம் தாங்கிய குழுதான் ஹமாஸ்.

கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1500க்கும் அதிகமானவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், இறந்தவர்களின் சடலங்கள் தொடர்பாக எந்த புகைப்படமும் பொதுவெளியில் பகிரப்படவில்லை. இப்படி இருக்கையில், இதனை காரணமாக வைத்துக்கொண்டு மிச்சம் மீதமிருக்கும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். குழந்தைகளும், கர்ப்பிணிகளும், முதியோரும் நோய் தொற்று அபாயத்தில் இருக்கிறார். போரின் தீவிரம் குறையவில்லை. ஒரு கட்டத்தில் இந்த தாக்குதலை பார்த்து 'ஹிஸ்புல்லா' அமைப்பு கொதித்து எழுந்தது.

இது ஈரான் ஆதாரவு பெற்ற ஹமாஸுக்கு சப்போர்ட் செய்யும் அமைப்பாகும். தற்போது லெபனானிலிருந்து இயங்கி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக, ஹமாஸுடன் கைகோர்த்து ஹிஸ்புல்லா களத்தில் இறங்க.. இஸ்ரேல் கொஞ்சம் தடுமாறியது. இருப்பினும் அமெரிக்க உதவியால் சுதாரித்துக்கொண்ட அந்நாடு, தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

பேஜர், வாக்கி டாக்கி என சைபர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், போர் விமானங்களை கொண்டு நேரடி தாக்குதலிலும் இறங்கியது. இதில் 500க்கும் அதிகமான லெபனான் மக்கள் உயிரிழந்தனர். இப்படியே விட்டா.. மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடையும் என்று உணர்ந்த ஐநா, உடனடியாக இது குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியது.

இந்த கூட்டத்தில் லெபனான் பங்கேற்று பேசிய நஜிப் மிகடி, "இஸ்ரேலின் சைபர் தாக்குதல், வான்வழி தாக்குதல் ஆகியவை லெபனான் மக்களை அச்சத்திற்கு தள்ளியிருக்கிறது. லெபனானின் எல்லையில் இஸ்ரேல் விமானங்கள் நுழைந்ததன் மூலம் எங்களின் இறையான்மையை அவர்கள் மீறியிருக்கிறார்கள். அவர்கள் நடத்திய தாக்குதல் மூலம் 600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தீவிரவாதத்தை பரப்புகிறார்கள். எனவே, இதன் மீத ஐநா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கில் வளர்ந்து வரும் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்கவும், தீர்வு காணவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடப்பட்டது. இந்த கூட்டத்தில் வைத்து, "இவங்கதான் தீவிரவாதிகளை பரப்புகிறார்கள்" என்று இஸ்ரேல் மீது லெபனான் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+