போரை நிறுத்துங்கள்! ரஷ்யாவிற்கு எதிராக ஐநா பொது சபையில் தீர்மானம்.. வாக்களிப்பதை தவிர்த்த இந்தியா!
ஐநாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானங்களில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிப்பதை இந்தியா பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளது.
நியூயார்க்: உக்ரைன் போரை உடனே நிறுத்தக்கோரி ஐநாவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேறக் கோரி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால் இந்தியா - சீனா இரண்டு நாடுகளும் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வாக்களிக்கவில்லை.
கடந்த வருடம் மார்ச் மாதத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடங்கியது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையிலும், உக்ரைனில் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் அமைக்கப்படுவதை எதிர்க்கும் வகையிலும் ரஷ்யா திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது.

போர்
முதல் 3 மாதங்கள் தீவிரமாக நடந்த போர் தற்போது விட்டு விட்டு நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாடுகளுமே போரில் பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை. ரஷ்யா பெரிதாக உக்ரைன் நாட்டு நகரங்கள் எதையும் கைப்பற்றவில்லை. அப்படியே ரஷ்யா கைப்பற்றிய நகரங்களையும் கடந்த 2 மாதங்களில் பெரிய அளவில் இழந்துவிட்டது. இந்த போர் ஆப்கான் தாலிபான் போர் போல ஒரு முடிவில்லா போராக மாறிவிட்டது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. போரில் நேரடியாக பங்கு கொள்ள முடியாது என்பதால் ஆயுதங்களை மட்டும் வழங்கி போர் புரிந்து வருகிறது.

பிடன் விசிட்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் சமீபத்தில் திடீரென உக்ரைன் சென்றார். அவர் இப்படி திடீரென உக்ரைன் பயணம் மேற்கொண்டது, உலக அளவில் கவனிக்கப்பட்டது. உக்ரைன் போர் தொடங்கி இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. சுமார் 18,358 பொதுமக்கள் இந்த போரினால் பலியாகி உள்ளனர் என்று ஐநா தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் இல்லாமல் வீரர்கள் மட்டும் 11 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை இறுதியானது இல்லையென்றும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் ஐநா அச்சம் தெரிவித்துள்ளது.

போர்
உக்ரைன் போரை உடனே நிறுத்தக்கோரி ஐநாவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேறக் கோரி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 193 உறுப்பினர்களை கொண்ட ஐநாவின் NGAவில் மாநாடு நேற்று நியூயார்க்கில் நடந்தது. இது சிறப்பு கூட்டம் ஆகும். நேற்று நடந்த வாக்கெடுப்பின் போது, 141 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 7 பேர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன., 32 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்காமல், நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தன. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இதில் வாக்களிக்கவில்லை.

தீர்மானம் வெற்றி
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ஐநாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானங்களில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து இந்தியா பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளது. இந்த முறையும் அதே முடிவை எடுத்துள்ளது. போரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்து இருந்தாலும், இதில் ரஷ்யாவை இந்தியா நேரடியாக எதிர்ப்பது இல்லை. இந்த தீர்மானத்தில் ரஷ்யாவிற்கு எதிராக வலுவான கருத்துக்கள் இருந்த காரணத்தால் அதை இந்தியா ஆதரிக்கவில்லை. பெரும்பான்மை நாடுகள் இந்த தீர்மானத்தில் ஆம் என்று வாக்களித்த காரணத்தால் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications