ஏலியன்கள்.. யுஎப்ஓக்கள் உண்மையா? இன்று வெளியாகிறது பரபரப்பு சீக்ரெட்.. விசாரிக்கும் அமெரிக்க அரசு!
நியூயார்க்: ஏலியன்களின் வாகனம் என்று அழைக்கப்படும் யுஎப்ஓ வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இன்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
யுஎப்ஓ தொடர்பான அரசின் சாட்சியங்கள் 3 பேர் விசாரணை செய்யப்பட உள்ளனர். இதனால் யுஎப்ஓ குறித்த உண்மைகள், ரகசியம் வெளியே வரப்போகிறது. தேசிய பாதுகாப்பு, எல்லை மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஹவுஸின் துணைக்குழு இந்த விசாரணையை நடத்துகிறது. மேலும் இயற்பியல் விதிகளை மற்றும் நாம் இதுவரை படித்த விமான திறன்களை மீறும் விமானங்கள் பற்றி இதில் ஆய்வு செய்ய உள்ளனர். மனிதர் அல்லாத நுண்ணறிவு உயிரினங்கள் உள்ளனவா? அவை மூலம் இந்த விமானங்கள் இயக்கப்படுகிறதா என்று இந்த விசாரணை நடத்தப்பட உள்ளன.
அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை சமூகத்தின் முன்னாள் பணியாளர்களின் சாட்சியங்களும் இந்த விசாரணையின் போது விசாரிக்கப்பட உள்ளன. ஓபன் கோர்டில் நடப்பதால் இந்த விசாரணை தொலைக்காட்சிகளில் லைவ்வாக ஒளிபரப்பப்படும்.

இன்று நடக்கும் விசாரணையில் இரண்டு முன்னாள் அமெரிக்க கடற்படை விமானிகள், ரியான் கிரேவ்ஸ் மற்றும் டேவிட் ஃபிரேவர் ஆகியோரின் சாட்சியங்கள் விசாரிக்கப்படும். இவர்கள் இருவரும் அமெரிக்க ராணுவ வான்வெளியில் இயங்கும் வழக்கத்திற்கு மாறான விமானங்களை பார்த்ததாக ஏற்கனவே கூறி உள்ளனர். இதனால் அவர்களிடம் விசாரணை நடத்துவது மிக முக்கியம் ஆகிறது.
யுஎப்ஓக்கள்: உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு.நாம் பல ஹாலிவுட் படங்களில் கூட இது போன்ற விமானங்களை பார்த்து இருக்கிறோம். அமெரிக்காவில் இது குறித்து பலர் புகார் வைத்து இருந்தாலும் கூட, கடந்த 2020ம் வருடம் வரை அமெரிக்கா இந்த யுஎப்ஓ குறித்து அதிகாரபூர்வமாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தட்டுகள்: இந்த தட்டுகளை மக்கள் பார்த்ததை மறுத்து வந்த அமெரிக்கா கடந்த 2020ம் வருடம் இப்படி தட்டுகள் பறந்தது உண்மைதான் என்று முதல்முறை ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்த வீடியோக்களை பகிர்ந்தது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. யுஎஃப்ஓ எனப்படும் அடையாளப்படுத்த முடியாத பறக்கும் பொருள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் கூட இது வேற்றுகிரக வாசிகளுடையது என்று பென்டகன் தெரிவிக்கவில்லை.
ஏற்றுக்கொண்டது: இது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் அவை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், பென்டகன் இதை பற்றி விசாரிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் டாஸ்க் போர்ஸ் குழு அமைத்தது. காங்கிரஸ் அவை இந்த குழுவிடம் யுஎஃப்ஓ குறித்து ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் பென்டகன் உருவாக்கிய குழுவின் இந்த யுஎப்ஓ ரிப்போர்ட் தற்போது வெளியானது. ஒரு வருட ஆராய்ச்சி முடியில், 144 யுஎப்ஓ விமானங்களில் ஒன்றை தவிர மற்ற எதை பற்றியும் விளக்கம் அளிக்க முடியாது. இது என்னவென்றே தெரியவில்லை. இந்த யுஎப்ஓ குறித்த போதிய டேட்டா இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் மேலே பறந்து கொண்டு இருந்த மர்ம பொருள் ஒன்றை கூட சமீபத்தில் அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளது.
என்ன நடந்தது? அமெரிக்காவின் எப் 22 விமானம் மூலம் இந்த யுஎப்ஓ சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் அது ஏலியன் விமானமாக இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த ஒரு விமானம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும் அதை யுஎப்ஓ என்றுதான் அழைப்பார்கள். யுஎப்ஓ என்பதற்காக இதை ஏலியன் விமானம் என்று அழைக்க வேண்டியது இல்லை. ஆனால் இந்த விமானம் குறித்து எந்த அடிப்படை தகவலும் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறி உள்ளதால் இது ஏலியனின் யுஎப்ஓ ஆக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று காலைதான் அந்த யுஎப்ஓ விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
அலாஸ்கா : அலாஸ்கா மீது பறந்து கொண்டு இருந்த போது அதை அமெரிக்கா விமானப்படை சுட்டு வீழ்த்தி உள்ளனர். கிட்டத்தட்ட கார் அளவிற்கு இந்த யுஎப்ஓ இருந்துள்ளது. இந்த பறக்கும் பொருள் யாருக்கும் சொந்தமானது என்று தெரியவில்லை. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த பொருள் இருந்தது. இது எங்கே இருந்து பறக்க தொடங்கியது என்பது தெரியவில்லை. இதை அமெரிக்க அதிபர் பிடன்தான் சுட்டு வீழ்த்த சொன்னார் என்று பென்டகன் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில்தான் ஏலியன்களின் வாகனம் என்று அழைக்கப்படும் யுஎப்ஓ வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இன்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications