26/11 மும்பை தாக்குதலின் முக்கிய புள்ளி! இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா நீதிமன்றம் ஒப்புதல்
நியூயார்க்: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக இந்தியா கோரி வந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி திடீரென புகுந்த தீவிரவாதிகள் நவம்பர் 29ம் தேதி வரை இடைவிடாது தாக்குதல் நடத்தினர் இதில் 164 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல 308 பேர் வரை காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஹெட்லிக்கு உதவியதாக தஹாவூர் ராணா மீது மத்திய அரசின் விசாரணை அமைப்பு குற்றம்சாட்டியது.

தஹாவூர் ராணாவை இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் NIA கடந்த 2020ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்தது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட, அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டதாக குறிப்பிட்ட நீதிபதி, ராணைவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications