அமெரிக்க விசா.. புதிய விண்ணப்பங்களை ஏற்க தொடங்கிய தூதரகம்.. H-1பி விசாவை புதுப்பிக்க அனுமதி!
நியூயார்க்: H-1B மற்றும் H-4 விசாக்கள் இரண்டிற்கும் விதிக்கப்பட்ட தடையில் அதிபர் டிரம்ப் தளர்வுகளை அறிவித்த நிலையில், தற்போது இந்த விசாக்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்கள் முன் H-1B மற்றும் H-4 விசாக்கள் இரண்டிற்கு விதிக்கப்பட்ட தடையில் சில முக்கியமான தளர்வுகளை அறிவித்தார். அதன்படி அமெரிக்காவில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் அதே வேலைக்கு திரும்பினால், அவர்களுக்கு H-1B விசா வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதாவது அமெரிக்காவில் உள்ள அதே நிறுவனத்தில், அதே வேலைக்கு திரும்பினால் H-1B விசா வழங்கப்படும். அதேபோல் இவர்களின் மனைவிகளும் அமெரிக்கா திரும்ப அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த விசாக்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரங்களில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது. அதன்படி எச் 1 பி மற்றும் எல் 1 விசா விண்ணப்பங்களை தூதரகத்தில் உள்ள டிராப் பாக்ஸ்களில் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எச் 1 பி விசாவை இதன் மூலம் புதுப்பிக்க முடியும். இந்தியா வந்துவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பும் நபர்கள், தங்கள் பழைய பணிக்கே சென்றால், அதற்கு விசா புதுப்பிக்கும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
அதேபோல் எப், எம், ஜே விசா விண்ணப்பங்களும் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்காக விசா விண்ணப்பங்கள் துரிதமான ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக வெளிநாட்டினர் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் H-1B மற்றும் H-4 விசாக்கள் ஆகிய இரண்டையும் வழங்க இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். கடந்த ஜூன் 22ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை காக்க டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தற்போது இதில்தான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு டிரம்ப் இதில் தளர்வுகள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications