நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயணிகளிடம் சேட்டை! குட்டி கொரில்லா குறும்பு! குச்சியை எடுத்து பின்னி எடுத்த தாய் கொரில்லா - வீடியோ

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை சீண்டி அவர்களிடம் சேட்டை செய்த குட்டி கொரில்லாவை, அதன் தாய் கொரில்லா மரக்குச்சியை எடுத்து துரத்தி துரத்தி அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விலங்குகளிலேயே மிகவும் அறிவுத்திறன் படைத்த விலங்காக கருதப்படுவது குரங்குகள் தான். குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரினம்தான் மனிதன் என்று அறிவியலே கூறுகிறது.

அதனால் மனிதனை போல ஓரளவுக்கு சிந்தித்து செயல்படுபவையாக குரங்குகள் உள்ளன. அதிலும், கொரில்லா, சிம்பன்ஸ் வகை குரங்குகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது சில நேரங்களில் அது அப்படியே மனிதர்களின் செயல்பாடுகளை ஒத்திருக்கும்.

அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க

குடும்பமாக வசிக்கும் கொரில்லாக்கள்..

குடும்பமாக வசிக்கும் கொரில்லாக்கள்..

அதுமட்டுமின்றி, மனிதர்களை போல குடும்பம் குடும்பமாக வாழும் பழக்கத்தை கொண்டிருப்பதும் கொரில்லாக்களின் சிறப்பம்சம் ஆகும். மேலும், கொரில்லா குடும்பங்களிலும் அன்பு, காதல், சண்டை உள்ளிட்டவற்றை காண முடியும். மேலும், குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோர் கண்டிப்பது போல, கொரில்லா குட்டிகள் தவறு செய்தால் அதனை தாய் அல்லது கொரில்லாக்கள் கண்டிக்கும். இதுதொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் உலாவுகின்றன. அதுபோல ஒரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதுகுறித்த விவரம் வருமாறு:

 அமெரிக்க மிருகக்காட்சி சாலை

அமெரிக்க மிருகக்காட்சி சாலை

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டைகோ நகரில் மிருகக்காட்சி சாலை ஒன்று அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலி, கொரில்லா, சிம்பன்சி உட்பட அனைத்து வனவிலங்குகளும், பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். அதுவும், சுற்றுலா பயணிகள் இந்த மிருகக்காட்சி சாலைக்கு அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். மற்ற மிருகக்காட்சி சாலைகளை போல இல்லாமல், இங்கு பல மிருகங்களை ஓரளவுக்கு அருகில் நின்று பார்க்கலாம். மேலும், இங்கு மிருகங்களை வீடியோ எடுப்பதற்கும் அனுமதி உண்டு.

மக்கள் மீது கல் வீசிய குட்டி கொரில்லா

மக்கள் மீது கல் வீசிய குட்டி கொரில்லா

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மிருகக்காட்சி சாலைக்கு சுற்றுலா பயணிகள் சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள கொரில்லா குரங்குகள் வசிக்கும் பகுதிக்கு சில சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிப் பார்த்தனர். எப்போதுமே கொரில்லா பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை அங்குள்ள பாதுகாவலர்கள் எச்சரித்துதான் அனுப்புவர். தடை செய்யப்பட்ட பகுதிக்கு அருகே செல்வதை தவிர்க்குமாறு ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிரு்ககும். ஏனெனில் கொரில்லாக்கள் மிக மூர்க்கத்தனமான விலங்கு. அந்த வகையில், அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் மீது திடீரென கற்கள் வந்து விழுந்துள்ளன. என்ன நடக்கிறது என்று பார்த்தால் அங்குள்ள இரண்டே வயது நிரம்பிய குட்டி கொரில்லா ஒன்று, மலைக் குன்றின் மீது ஏறி நின்று பார்வையாளர்கள் மீது கற்களை தூக்கி வீசிக் கொண்டிருந்தது.

குச்சியை எடுத்து வெளுத்த தாய் கொரில்லா

குச்சியை எடுத்து வெளுத்த தாய் கொரில்லா

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே ஓடினர். அந்தக் குட்டி கொரில்லாவுக்கு பக்கத்தில் பெரிய கொரில்லாக்கள் இரண்டு இரு்ககின்றன. ஆனால், குட்டியின் செயலை அவை தடுக்கவில்லை. அந்த சமயத்தில், அதன் பின்னால் இருந்து அதன் தாய் கொரில்லா வந்தது. அது வெறும் கையுடன் வரவில்லை. வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்தால் அம்மா குச்சியை எடுத்து வருவதை போல, ஒரு மரத்தில் இருந்து குச்சியை ஒடித்துக் கொண்டு வந்தது. இதை அறியாத குட்டி கொரில்லா, வழக்கம் போல கற்களை வீசிக் கொண்டிருந்தது. அப்போது குச்சியை எடுத்து குட்டி கொரில்லாவை சரமாரியாக அடித்தது தாய் கொரில்லா. வலி தாங்க முடியாமல் குட்டி கொரில்லா ஓடிய போதிலும், தாய் கொரில்லா விடாமல் அதை துரத்தி துரத்தி அடித்தது. இதனை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி நெட்டீசன்களின் கிண்டலான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

English summary
In a mind blowing scene in US, A mother gorilla beat her baby by stick as it was throwing stones at tourists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X