செவிலியரை திடீரென உள்ளே இழுத்த எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம்.. எப்படி நடந்தது?
நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செவிலியர் ஒருவர் எம்ஆர்ஐ இயந்திரத்திற்கும் படுக்கைக்கும் இடையில் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்தார். எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தின் அதிகப்படியான காந்தபுலத்தால் ஈர்க்கப்பட்டு அந்த செவிலியர் சிக்கிய நிலையில், இப்போது அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் மருத்துவமனை லேப்களில் பயன்படுத்தப்படும் பல வகை ஸ்கேன் இயந்திரங்களில் மிகவும் முக்கியமானது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின். எம்ஆர்ஐ ஸ்கேன் மிஷின் மூலம் உடலின் எந்த பாகத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து அறிய முடியும். ஆனால், இந்த எம்ஆர்ஐ மிஷின் கொஞ்சம் ஆபத்தானது. கவனக்குறைவாக இருந்தால் நம்மை உள்ளிழுத்து, உயிரையே பறித்துவிடும்.

எந்த மருத்துவமனையாக இருந்தாலும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இருக்கும் அறைக்குள் உலோகப் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எம்ஆர்ஐ மெஷின்கள் இருக்கும் அறைக்குள் உலோகபொருட்களுடன் சென்றால், அங்குள்ள மிக அதிகமான காந்தப்புலம், உலோகங்களை ஈர்த்துவிடும். இதன் காரணமாக தெரியாமல் யாராவது ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் உள்ளே செல்கிறார்கள் என்றால,அப்படி செல்பவர்கள் விபத்தில் சிக்கி விடுவார்கள்.
பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன் மிஷின் ஆன் ஆகி இருக்கும் போது, யாராவது ஆக்சிஜன் சிலிண்டருடன் உள்ளே வந்தால் அவர்களை அப்படியே மிகவேமாக இழுத்துவிடும். அப்படி இழுத்ததால் நிறைய பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள கைசர் பெர்மனென்டே மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஐனா செர்வாண்டஸ் பணியாற்றி வருகிறார். இவர் படுக்கையின் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். எம்ஆர்ஐ ஸ்கேனின் காந்தப்புலத்தால் எம்ஆர்ஐ ஸ்கேனருக்குள் கட்டுப்பாடில்லாமல் படுக்கை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதன் இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். எம்ஆர்ஐ இயந்திரத்திற்கும் படுக்கைக்கும் இடையில் சிக்கி கதறிய செவிலியர் ஐனா செர்வாண்டஸ்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்திகளின் படி, எம்ஆர்ஐ ஸ்கேனில் இழுத்துச் செல்லப்பட்ட செவிலியரின் அலறல் சத்தம் கேட்டு மருத்துவ ஊழியர்கள் ஓடி வந்து உதவினார்கள். செவிலியர் செர்வாண்டஸின் ஆடைககள் உள்ளே இழுக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்தார். மருத்துவ மனையில் விபத்து ஏற்பட்ட சமயத்தில், செவிலியர் படுக்கையில் நோயாளி ஒருவரைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது நோயாளி காயமின்றி தப்பினார். ஆனால் செவிலியர் சிக்கிக்கொண்டார்.
இதனிடையே விபத்து நடந்த ரெட்வுட் சிட்டி மையம் , பாதுகாப்பான முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் சேவைகளை வழங்கத் தவறிவிட்டது என்று விசாணையில் தெரியவந்துள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அறைக்குள் எம்ஆர்ஐ ஊழியர்கள் யாரும் இல்லை; நோயாளி உட்பட யாருக்கும் பாதுகாப்பாக மையம் இல்லை. ஸ்கேன் இயந்திரம் ஆன் ஆகி இருந்த போது, அறையின் கதவு திறந்து கிடந்தது. மேலும், பாதுகாப்பு அலாரம் ஒலிக்கவே இல்லை, மேலும் பணியாளர்கள் முறையான பயிற்சி எதையும் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே "இது ஒரு அரிதான நிகழ்வு, ஆனால் ஒரு விபத்து ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அது மீண்டும் நிகழாமல் தடுக்க மாற்றங்களைச் செயல்படுத்துவோம் என்று Kaiser Permanente San Mateo இன் மூத்த துணைத் தலைவர் ஷீலா கில்சன் தெரிவித்துள்ளார். '
எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள் டைட்டானியம், பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களைத் தவிர மற்ற அனைத்து உலோகங்களையும் ஈர்க்கும் என்றும், எனவே இந்த ஸ்கேன் அறைக்குள் பிரத்யேக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட படுக்கை (MRI compatible Strecher) மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களையே பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications