முதல் அடியே.. பயங்கர அடியா இருக்கே! நீதிபதிகள் மீதே கைவைத்த டிரம்ப்.. அடுத்தடுத்து பலர் நீக்கம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு நீதிபதிகள் சிலரை நீக்கி உத்தரவிட்டு உள்ளார். ஆனால் அவர் இந்த உத்தரவை சாதாரண காரணங்களுக்காக பிறப்பிக்கவில்லை. முக்கியமான ஒரு காரணத்திற்காக அவர் இந்த நீக்கத்தை அறிவித்து உள்ளார்.

அமெரிக்க நீதித்துறையில் இருக்கும் நீதிபதிகள், நீதிமன்ற குழுவில் இருக்கும் நீதிபதிகள் அல்லாத வேறு சில அதிகாரிகளை டிரம்ப் நீக்க உள்ளாராம். 5-6 பேர் வரை நீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இவர்களின் லிஸ்ட் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

donald trump inauguration donald trump

இவர்கள் எல்லோரும் அமெரிக்காவை பூர்வீகமாக கொள்ளாதவர்கள். வேறு வேறு நாட்டில் இருந்து ஆவணங்கள் இன்றி அமெரிக்கா வந்தவர்கள். ஆவணங்கள் இன்றி வந்து பின்னர் பல வழிகளில் இவர்கள் குடியுரிமை பெற்றவர்கள். முறையான ஆவணங்களோடு வந்து பின்னர் குடிமகன்கள் ஆனவர்கள் அல்ல.

இவர்களை டிரம்ப் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இந்த நிலையில்தான் அது போன்ற பின்புலம் கொண்டவர்களை நீக்கி டிரம்ப் உத்தரவிட்டு இருக்கிறார் .

முக்கியமான சில உத்தரவுகள்:

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவி ஏற்றார். தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே 200 முக்கியமான உத்தரவுகளை டிரம்ப் பிறப்பிக்கிறார். அவர் முதல் கையெழுத்து போடும் சட்டங்களில், சில விஷயங்கள் குறித்த அறிவிப்புகளை தனது உரையில் வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 3ம் பாலினத்திற்கும், LGBTQ பிரிவினருக்கும் எதிராக அடிக்கடி கருத்து தெரிவிக்க கூடியவர். அந்த வகையில் அவர் தற்போது எடுத்துள்ள முடிவு ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதன்படி FBI அமைப்பில் இருக்கும் பாலின, இன ரீதியிலான துறையை மூட முடிவு செய்துள்ளார். இந்த FBI பிரிவு பாலின ரீதியிலான குற்றங்கள், இன அதாவது கறுப்பின, வெள்ளையின ரீதியிலான குற்றங்களை மட்டும் விசாரிக்கும். இதை நீக்க முடிவு செய்துள்ளார்.

அதேபோல் இரண்டு பாலினம் மட்டுமே உள்ளது.. அமெரிக்காவில் மற்ற பாலினங்களுக்கு அனுமதி இல்லை என்று அதை குற்றமாக்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களை பயங்கரவாத அமைப்புகளாக முறையாக அறிவித்துள்ளார். இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இனி தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்படுவர்.

நாட்டின் தணிக்கை அமைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் யாரும் என்ன கருத்தும் தெரிவிக்கலாம். இனி பொது ஊடகங்களில் யாருடைய கருத்தும் தணிக்கை செய்யப்படாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள். இவர்களை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+