மோடி அமெரிக்க மண்ணில் கால் வைக்கும் முன்.. இந்தியா மீது ஆக்சன் எடுக்கும் டிரம்ப்? இப்படி ஒரு பிளானா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் புதிய வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாடு அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளின் அதே அளவில் பரஸ்பர வரிகளை அல்லது அதைவிட அதிக வரிகளை விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். வாஷிங்டன் டி.சிக்கு அவர் செல்வதற்கு முன் டிரம்ப் இது தொடர்பான முடிவை வெளியிடுவார். இந்தியா மீதும் இதில் வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

donald trump

அடுத்த வாரம் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக நான் அறிவிப்பு வெளியிடுவேன். நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம்.

டிரம்ப் வரும் போதெல்லாம் டாலர் வலிமை அடைந்து உள்ளது. இதனால் இந்த முறையும் அப்படி நடந்தால்.. இந்தியாவிற்கு பொருளாதார சிக்கல் ஏற்படும். இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி போடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பதிலடி தரும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான டீம் முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்ளுவோம் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது போக டாலர் வர்த்தகம் தாண்டி, இந்தியாவின் வரி விதிப்பு முறையை காரணம் காட்டி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது 25% கூடுதல் வரியை விதிக்கவும் டிரம்ப் முயல்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ மீது அவர் விதிக்கும் 25% வரி இந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. மேலும் சீனா மீதான 10% வரியை அறிவித்துள்ளார். அதன்பின் இந்தியா மீதான வரியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்தியா மாஸ்டர் பிளான்:

இதை சமாளிக்க இந்தியா பின்வரும் அஸ்திரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாம் . டாலர் வர்த்தகத்தை விட்டு மாற மாட்டோம் என்று இந்தியா மீண்டும் உறுதி அளிக்கும் என்கிறார்கள் . ஏற்கனவே டாலரில் வர்த்தகம் செய்யவே விரும்புவதாகவும்.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வருவதில் ஆதரவு இல்லை என்று பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா தகவல் அனுப்பி உள்ளதாம். அதிகாரபூர்வமற்ற ஆலோசனைகளில் பிரிக்ஸ் நாடுகளிடம் இந்தியா இந்த தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை செய்து வருகிறதாம்.

ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாம். சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள் , எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+