பாகிஸ்தானின் மூக்கை உடைத்த அமெரிக்கா.. டிரம்ப் எப்போது வருவதாக சொன்னார்? வெள்ளை மாளிகை விளக்கம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக நேற்று முதல் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டுக்கு பிறகு எந்த அமெரிக்க அதிபரும் பாகிஸ்தானுக்கு செல்லாத நிலையில் சுமார் 20 ஆண்டுக்கு பிறகு டிரம்ப் செல்வதாக கூறப்பட்ட தகவல் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் செல்லும் திட்டம் டிரம்புக்கு இல்லை என்று வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. உலகம் முழுவதும் பாகிஸ்தானில் இருந்து தான் பயங்கரவாதிகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் நம் நாடும் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூட பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்'டை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதையடுத்து நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பந்தாடியது.
நம் நாடு அடித்த அடியில் அஞ்சி நடுங்கிய பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. எங்களை தாக்காதீர்கள். நாங்கள் தாங்கமாட்டோம் என்று மண்டியிட்டது. இதையடுத்து நம் நாடு தாக்குதலை நிறுத்தியது. இப்படி நம் நாட்டுடனான மோதலில் மண்ணை கவ்வினாலும் கூட பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஃபீல்ட் மார்ஷல் என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் நம் நாட்டுக்கு எதிரான போரில் சிறப்பாக பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்தியதற்காக தான் அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. செப்டம்பர் மாதத்தில் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதியை வாஷிங்டனுக்கு அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து மதிய உணவு வழங்கினார். இதன் மூலம் டிரம்ப் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவது தெரியந்தது. இதனால் டிரம்ப் பாகிஸ்தான் செல்வதாக வெளியான செய்தி நம் நாட்டுக்கு வார்னிங்காக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் செல்கிறாரா? என்பது தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை சார்பில், ‛‛ அமெரிக்க அதிபர் பாகிஸ்தான் செல்வது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நேரத்தில் அதுபற்றிய எந்த திட்டமும் இல்லை'' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் பொய் செய்திகளை வெளை்ள மாளிகை தோலுரித்து காட்டி உள்ளது.
அமெரிக்க அதிபர் பாகிஸ்தான் செல்வதை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். கடைசியாக கடந்த 2006ம் ஆண்டில் தான் அமெரிக்க அதிபர் ஜார்ஸ் டபிள்யூ புஷ் பாகிஸ்தானுக்கு சென்றார். அதன்பிறகு அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் என யாரும் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. தற்போது டொனால்ட் டிரம்ப் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதையும் அமெரிக்க வெள்ளை மாளிகை முற்றிலுமாக மறுத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் மூக்கு உடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications