உங்களுக்கு தந்த பல கோடி டாலரை.. திருப்பி கொடுங்க.. உக்ரைனுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா.. போச்சு!
நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இந்த நிலையில் உக்ரைனுக்கு கொடுத்த பல கோடி நிதிகளை திருப்பி கொடுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை உக்ரைனை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உக்ரைன் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை.இப்படிப்பட்ட நிலையில்தான் நாங்கள் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் பணம் தனது உள்ளோம். அதை திருப்பி கொடுங்கள்.. அதில் பாதிக்கு மேல் நீங்கள் திரும்பி கொடுங்கள், என்று டிரம்ப் உக்ரைனுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

உக்ரைனின் இயற்கை வளங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம். 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளதாம். போர் செலவுகளை சமாளிக்க, ஆயுதங்களை வழங்க 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.
ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு கடந்த வாரம் சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது, என்று தெரிவித்து உள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக பல விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. உக்ரைனை கட்டுப்படுத்துவதற்கான சில விதிகளை அமெரிக்கா உக்ரைனிடம் தனியாக தெரிவித்து உள்ளதாம். அதாவது உக்ரைன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில்.. உக்ரைனிடம் அமெரிக்கா சார்பாக சில கட்டுப்பாடுகள், கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாம்.
உக்ரைனுக்கு வைக்கப்படும் கட்டுப்பாடுகள்
உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த செலவிற்கு ஈடுகட்டும் விதமாக உக்ரைனுக்கு கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம். அதன்படி உக்ரைனின் இயற்கை வளங்களில் இருந்து, உற்பத்தியில் இருந்து வரும் வருவாயில் முதல் பங்கு அமெரிக்காவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா உக்ரைனிடம் தெரிவித்து உள்ளதாம்.
3 வருடங்களாக செய்த உதவிகளுக்கு பதிலாக இதை வழங்க வேண்டும் என்று உக்ரைனிடம் அமெரிக்கா கண்டிப்பாக கூறி உள்ளதாம். கிட்டத்தட்ட உக்ரைனை அமெரிக்காவின் பொருளாதார காலனியாக மாற்றும் வகையில் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாம்.
அமெரிக்கா சார்பாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட் ஒன்றில் இது தொடர்பான கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனிக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட மிக மோசமான கட்டுப்பாடுகள் உக்ரைன் மீது விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் இல்லாத காரணத்தால்.. ரஷ்யாவின் கையே ஓங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications