ஆபத்தான அதிபர்.. டிரம்ப்பின் ஒவ்வொரு மூவையும் அப்போதே கணித்த பெர்னி.. பிடனுக்கு தந்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் டொனால்ட் டிரம்ப் எப்படி எல்லாம் பிரச்சனை செய்வார் என்று ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் பெர்னி சாண்டர்ஸ் கணித்து உள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக பிரைமரி தேர்தலில் நின்று தோல்வி அடைந்த பெர்னி... டிரம்பின் ஒவ்வொரு மூவையும் துல்லியமாக கண்டித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றால் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றிபெற்றுவிடுவார்.

தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

ஏற்கவில்லை

ஏற்கவில்லை

இந்த நிலையில் தபால் வாக்குகளை எண்ணுவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். நான் வென்றுவிட்டேன். அதனால் தபால் வாக்குகளை எண்ணுவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதற்காக டிரம்ப் வழக்கும் தொடுத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு டிரம்ப் இப்படி எல்லாம் பிரச்சனை செய்ய வாய்ய்ப்புள்ளது என்று ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் பெர்னி சாண்டர்ஸ் முன்பே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

கடந்த அக்டோபர் 26ம் தேதி பெர்னி சாண்டர்ஸ் அளித்த பேட்டியிலேயே டிரம்ப் குறித்து பிடனுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதில், அமெரிக்காவில் ஆட்சி நடத்தியவர்களிலேயே டிரம்ப்தான் மிகவும் ஆபத்தான அதிபர். அவர் பொய் சொல்கிறார், அறிவியலை நம்பாமல் முட்டாள்தனமாக பேசுகிறார், இனவெறி பிடித்து பேசுகிறார், நிறவெறியோடு நடந்து கொள்கிறார் என்பதால் இதை நான் சொல்லவில்லை. ஆனால் அவர் இதை எல்லாம் திட்டமிட்டு செய்கிறார். இதுதான் ஆபத்து.

வீழ்த்த வேண்டும்

வீழ்த்த வேண்டும்

அமெரிக்க ஜனநாயகத்தை திட்டமிட்டு வீழ்த்த வேண்டும் என்று டிரம்ப் செயல்படுகிறார். தேர்தல் நாளில் டிரம்ப் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சூழ்ச்சி செய்ய வேண்டும் என்று டிரம்ப் செயல்படலாம். இரவு 10 மணிக்கு டிரம்ப் மிச்சிகன், பென்சில்வேனியா, விஷ்கஸ்சின் தொகுதியில் வெற்றிபெறலாம். உடனே டிரம்ப் டிவி முன் தோன்றி.. மொத்தமாக தேர்தலில் தான் வென்றுவிட்டேன் என்று கூட கூறலாம்.

வென்றுவிட்டேன்

வென்றுவிட்டேன்

டிவி முன் தோன்றி.. மக்களே நான் வென்றுவிட்டேன், உங்களுக்கு நன்றி என்று டிரம்ப் கூறவாய்ப்புள்ளது. ஆனால் மறுநாள் தான் உண்மையான தேர்தல் முடிவுகள் வரும். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு உண்மையான தேர்தல் முடிவுகள் மறுநாள்தான் வரும். அதில்தான் உண்மையான வெற்றியாளர் பிடன் என்பது மக்களுக்கு தெரிய வரும். ஆனால் இதையும் டிரம்ப் ஏற்க மாட்டார்.

நான்தான் வெற்றிபெற்றேன்

நான்தான் வெற்றிபெற்றேன்

பாருங்கள் முதலில் நான்தான் வெற்றிபெற்றேன்.. ஆனால் அதற்கு பின் பிடன் வெற்றிபெற்றுவிட்டதாக கூறிவிட்டார்கள். எல்லாமே ஏமாற்றுவேலை. தபால் வாக்குகள் ஏமாற்று வேலை என்று கூறினேன்.பாருங்கள் பிடன் வென்றுவிட்டார். நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டேன் என்று டிரம்ப் சொல்ல வாய்ப்புள்ளது என்று பெர்னி சாண்டர்ஸ் எச்சரித்து இருந்தார். பிடன் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பெர்னி குறிப்பிட்டு இருந்தார்.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

டிரம்ப் தேர்தலுக்கு பின் இப்படி எல்லாம் செய்ய வாய்ப்புள்ளது என்று பெர்னி சாண்டர்ஸ் கணித்து இருந்தார். பெர்னி சாண்டர்ஸ் கணித்தது போலவே அப்படியே தற்போது டிரம்ப் செயல்பட தொடங்கி உள்ளார். பெர்னி சொன்னது போலவே.. டிரம்ப் தான்தான் வெற்றியாளர் என்று நேற்றே கூறிவிட்டார். அதேபோல் இன்று வந்து தபால் வாக்குகளில் முறைகேடு நடக்கிறது என்கிறார்.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

தன்னுடைய தோல்வியை டிரம்ப் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். பெர்னி சொன்னது போலவே டிரம்ப் அச்சு அசலாக செயல்பட்டு வருகிறார். டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டார் என்றும் பெர்னி கணித்து இருக்கிறார். டிரம்ப் இப்போது வழக்கு தொடுப்பதை எல்லாம் பார்த்தால் டிரம்ப் அப்படி ஒரு முடிவை எடுக்க கூட வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+