முறைகேடு நடக்கிறது.. முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்.. வெற்றிக்கு முன்பே டிரம்ப் டிவிட்.. பரபரப்பு!
நியூயார்க்: மிகப்பெரிய வெற்றி இது.. முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிடுவேன் என்று அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 160 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் இந்த முறை தேர்தலில் பதிவாகி உள்ளது.
இதில் 101 மில்லியன் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதனால் வாக்குகளை எண்ணி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எப்படி
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி முறைகேடு செய்ய பார்க்கிறது என்று அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். அதிபர் டிரம்ப் தனது டிவிட்டில், தேர்தலில் நாம்தான் பெரிய பெரும்பான்மை வகிக்கிறோம். ஆனால் அவர்கள் தேர்தலில் முறைகேடு செய்ய பார்க்கிறார்கள்.

முறைகேடு
நாம் அதை அனுமதிக்க கூடாது. தேர்தல் முடிந்த பின் யாரையும் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் டிரம்ப் செய்துள்ள இந்த டிவிட்டில் தவறான விஷயங்கள் இருப்பதாக கூறி டிவிட்டர் நிர்வாகம் அதை நீக்கி உள்ளது. இந்த டிவிட்டில் தவறான தகவல்கள் உள்ளது என்று டிவிட்டர் நிர்வாகம் அதில் முத்திரை குத்தியுள்ளது.

முடிவு
இந்த நிலையில் டிரம்ப் தனது இன்னொரு டிவிட்டில்.. நமக்கு இது மிகப்பெரிய வெற்றி.. இன்று இரவு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் டிரம்ப் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்றுகொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அமைதியாக அதிபர் பொறுப்பில் இருந்து விலகுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

எத்தனை
தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு 237 எலக்ட்ரல் வாக்குகள் இதுவரை கிடைத்துள்ளது. இன்னொரு பக்கம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு 210 எலக்ட்ரல் வாக்குகள் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications