நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1% தான் மீதம் உள்ளது.. வெறும் 1000 வாக்குகள்.. பெரிய டிவிஸ்ட் கொடுத்த ஜார்ஜியா.. ஆடிப்போன டிரம்ப்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பலரும் பென்சில்வேனியா, நெவாடா மீது கவனம் செலுத்தி வந்த நிலையில், ஜார்ஜியாவில் திடீர் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜார்ஜியாவை கைப்பற்றும் வாய்ப்பு பிடனுக்கு ஏற்பட்டுள்ளது.அங்கு தற்போது பிடன் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள்தான் இருக்கிறது. வெறும் 6 எலக்ட்ரல் வாக்குகள் இருந்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன்.. கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி விட்டார்.

தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ளார்.

அடுத்த அதிபர்.. வேகமாக விரைந்த சீக்ரெட் சர்வீஸ்.. பிடனுக்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு.. திருப்பம்! அடுத்த அதிபர்.. வேகமாக விரைந்த சீக்ரெட் சர்வீஸ்.. பிடனுக்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு.. திருப்பம்!

 பிடன் வெற்றி

பிடன் வெற்றி

பிடன் வெற்றிபெற 6 எலக்ட்ரால் வாக்குகள் தேவை. டிரம்ப் வெற்றிபெற 56 வாக்குகள் தேவை. முடிவுகள் அறிவிக்கப்படாத மாகாணங்களான பென்சில்வேனியாவில் 20 வாக்குகள், நார்த் கரோலினாவால் 15 வாக்குகள், ஜார்ஜியாவில் 16 வாக்குகள், நெவாடாவில் 6 வாக்குகள், அலாஸ்காவில் 3 வாக்குகள் உள்ளது.

நோக்கம்

நோக்கம்

பலரும் பிடன் நெவாடாவில் வெற்றிபெற வேண்டும்.. அங்கு 6 வாக்குகள் உள்ளது. அதோடு அங்கு பிடன்தான் முன்னிலை வகிக்கிறார். அதனால் பிடன் நெவாடாவில் வென்று ஆட்சியை பிடிப்பார் என்று எதிர்பார்த்தனர். அதோடு நெவாடா பாரம்பரியமான ஜனநாயக கட்சி ஆதரவு மாகாணம் என்பதால்.. நெவாடாவின் தேர்தல் முடிவுகளை பலரும் எதிர்பார்த்தனர்.

பென்சில்வேனியா

பென்சில்வேனியா

அதேபோல் இன்னும் சிலர் பென்சில்வேனியாவின் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தனர். அங்கு 20 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளது. இன்னொரு பக்கம் அங்கு கடந்த முறை டிரம்ப் வென்றாலும் கூட பாரம்பரியமான ஜனநாயக கட்சி மாகாணம் அது. இன்னொரு பக்கம் அங்கு அதிக அளவில் பதிவாகி இருக்கும் தபால் வாக்குகள் எல்லாம் ஜனநாயக கட்சியின் ஆதரவு வாக்குகள்.

ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

இதனால் இறுதி கட்டத்தில் பென்சில்வேனியாவில் பிடன் வென்று அதிபர் பதவியை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எல்லோரும் எதிர்பார்த்தது போல தபால் வாக்குகளில் பிடன் அதிக வாக்குகள் பெற்று.. டிரம்பிற்கும் தனக்கும் இருந்த இடைவெளியை பென்சில்வேனியாவில் குறைத்துக் கொண்டே வந்தார்.ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் தற்போது ஜார்ஜியாவில் டிரம்ப் தோல்வி அடையும் நிலைக்கு சென்று உள்ளார்.

தோல்வி நிலை

தோல்வி நிலை

ஜார்ஜியா பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணம். இங்கு டிரம்ப்தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இங்கு டிரம்ப் 70000-80000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தபால் வாக்குகளை அள்ளி குவித்துள்ள பிடன் இங்கு வேகமாக முன்னேறி தற்போது முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளார். டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார்.

எத்தனை

எத்தனை

தற்போது மக்கள் வாக்குகளின் அடிப்படையில் பிடன் 2449371 வாக்குகளையும், டிரம்ப் 2448454 வாக்குகளையும் பெற்றுள்ளார். இரண்டு பேருக்கும் இடையில் ஏறக்குறைய 1000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ஏறக்குறைய 1000 வாக்குகள் முன்னிலையில் பிடன் உள்ளார். இதனால் முடிவு யார் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம். கடைசியாக எண்ணப்பட்ட 25% வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் பிடனுக்கு வந்தது என்பதால்.. மீதம் இருக்கும் 1% வாக்குகள் மட்டுமே உள்ளது. இதுவும் பிடனுக்கே செல்ல வாய்ப்புள்ளது.

திருப்பம்

திருப்பம்

மீதம் இருக்கும் மக்கள் வாக்குகள் பிடனுக்கு சென்றால் .. அவர் இங்கு வெற்றிபெற்று 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற முடியும். 1992ல் இருந்தே இது குடியரசு கட்சியின் ஆதரவு தொகுதி என்பதால் டிரம்ப் அதிர்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே கடந்த முறை வென்ற ஸ்விங் தொகுதியான அரிஸோனாவை இந்த முறை இழந்ததை டிரம்ப் நம்ப முடியாமல் இருக்கிறார்.. தற்போது ஜார்ஜியாவையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் டிரம்ப் அதிர்ச்சியில் உள்ளார்.

English summary
US Presidential Election 2020: Just 1000 leading, Georgia gives a twist at the end for Trump and Biden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X