நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூடவே இருந்த மைக் பென்ஸ் எங்கே போனார்? 3 நாளாக வெளியே வராத டிரம்பின் இடது கை.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப் தோல்வி அடையும் நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் அவரின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் தற்போது தோல்வி அடையும் நிலைக்கு சென்று உள்ளார். அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இன்னும் 4-5 மாகாணங்களில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் இருக்கிறார். இதனால் அதிபர் தேர்தலில் டிரம்பின் தோல்வி உறுதியாகிவிட்டது.

இன்னொரு பக்கம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெறுவதற்கு இன்னும் 6 எலக்ட்ரல் வாக்குகளே தேவை. 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம்... அமைதியாக இருங்கள் - ஜோ பிடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம்... அமைதியாக இருங்கள் - ஜோ பிடன்

என்ன

என்ன

இந்த தேர்தலில் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்து பிடன் தேர்தலை சந்தித்தார். அதேபோல் துணை அதிபர் மைக் பென்சை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்து.. டிரம்ப் தேர்தலை சந்தித்துள்ளார். இதில் பிடன் வெற்றிபெற வாய்ப்புள்ள நிலையில்.. அவருடன் கமலா ஹாரிஸ் பொது இடங்களில் காணப்படுகிறார். பிடன் இருக்கும் வில்மிங்டன் பகுதியில் அவருடன் கமலா ஹாரிஸும் தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

ஆனால் இன்னொரு பக்கம் டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. கமலா ஹாரிஸ் போல இவர் வெளியே வருவது இல்லை. தேர்தல் நாள் அன்று டிரம்ப் முதலில் முன்னிலை வகித்தார். அப்போது டிரம்ப் உடன் காணப்பட்ட பென்ஸ் அதற்கு பின் எங்கே சென்றார் என்று பலருக்கும் தெரியவில்லை. மைக் பென்ஸ் வெள்ளை மாளிகைக்கும் வரவில்லை, டிரம்ப் பேட்டி அளித்த போதும் உடன் இல்லை.

எங்கே சென்றார்

எங்கே சென்றார்

இவர் மீது மட்டுமின்றி வெள்ளை மாளிகை அதிகாரிகள், தேர்தல் நிர்வாகிகள் பலர் மீது டிரம்ப் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலில் தோல்வியை எதிர்நோக்கி இருப்பதால் டிரம்ப் இவர்கள் மீது கோபத்தில் உள்ளார். அதோடு.. தனக்கு போதுமான ஆதரவை குடியரசு கட்சி உறுப்பினர்கள் வழங்கவில்லை என்று டிரம்ப் கருதுகிறார். இதனால்தான் பென்ஸ் இப்போது வெள்ளை மாளிகை பக்கம் வரவில்லை என்கிறார்கள்.

வழக்கு

வழக்கு

டிரம்ப்பை சமாதானம் செய்யும் பொருட்டு அவர் மேற்கொள்ள போகும் சட்ட போராட்டத்திற்கு நிதி திரட்ட வேண்டும் என்று மைக் பென்ஸ் அலைந்து வருகிறார். டிரம்பின் சட்ட போராட்டத்திற்கு ரூபாய் 400 கோடி ரூபாய் வரை செலவாகும். இதற்காக நிதி திரட்ட குடியரசு கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளைத்தான் மைக் பென்ஸ் செய்து வருகிறார்.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

இதனால்தான் மைக் பென்ஸ் தற்போது வெள்ளை மாளிகை பக்கம் வரவில்லை என்று கூறப்படுகிறது. முடிந்த அளவு நிதி திரட்ட வேண்டும் என்று இவர் அலைந்து வருகிறார். குடியரசு கட்சிக்கு பாரம்பரியமாக நிதி வழங்கும் கோடீஸ்வரர்களை சந்திக்க இவர் சென்று உள்ளார்.

இடது கை

இடது கை

எப்போதும் டிரம்பிற்கு இடது கை போல பென்ஸ் இருப்பார். டிரம்ப் சொதப்பும் இடங்களில் பென்ஸ்தான் டேமேஜ் கண்ட்ரோல் செய்வார்.. தற்போது நிதி திரட்ட வேண்டும் என்பதற்காக அவர் வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

English summary
US Presidential Election 2020: Mike Pence went out of the white house to collect funds for Trumps legal fight against election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X