நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தலையை வெட்டி..." FBI இயக்குனருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகர்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பர் மற்றும் முன்னாள் தேர்தல் ஆலோசகர் ஸ்டீவ் பன்னான் கொடுத்த பேட்டி ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. எப்பிஐ இயக்குனர் கிறிஸ்தபர் ரே தலையை வெட்ட வேண்டும் என்று இவர் கூறியது சர்ச்சையாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. ஜார்ஜியா உள்ளிட்ட முக்கியமான மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை முந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன்.. தற்போது வெற்றியை நெருங்கி உள்ளார்.

தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ளார்.

வாயை திறந்தாலே பொய்... டிரம்ப்புக்கு எதிராக ஒன்றிணைந்த அமெரிக்க ஊடகங்கள்.. நேரலை ஒளிபரப்பு 'கட்' வாயை திறந்தாலே பொய்... டிரம்ப்புக்கு எதிராக ஒன்றிணைந்த அமெரிக்க ஊடகங்கள்.. நேரலை ஒளிபரப்பு 'கட்'

பேட்டி

பேட்டி

டிரம்ப் இப்படி தோல்வியின் விளிம்பில் இருக்கும் நிலையில் அவரின் முன்னாள் தேர்தல் ஆலோசகர் ஸ்டீவ் பன்னான் கொடுத்த பேட்டி ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. யூ டியூபில் ஸ்டீவ் பன்னான் வார் ரூம் ( "Steve Bannon's War Room") என்ற நிகழ்ச்சியில் இவர் அளித்த பேட்டிதான் இப்படி சர்ச்சையாகி உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபரான பின் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஸ்டீவ் பன்னான் இதில் பேசி இருந்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதில், டிரம்பிற்கு சிலர் துரோகம் செய்துவிட்டனர். எப்பிஐ இயக்குனர் கிறிஸ்தபர் ரே, கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வந்த மருத்துவ தலைமை ஆலோசகர் ஆண்டனி பவுச்சி இருவருக்கும் கடுமையான தண்டனைகளை டிரம்ப் கொடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்ததும் டிரம்ப் இவர்களை எல்லாம் மிக கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்தில் பழைய காலங்களில் செய்வது போல.. கூர்மையான ஆயுதங்களால் இவர்களின் தலையை வெட்ட வேண்டும். இவர்களின் தலையை வெட்டி.. வெள்ளை மாளிகையின் இரண்டு பக்கமும் வைக்க வேண்டும். துரோகிகளுக்கு இப்படித்தான் பாடம் எடுக்க வேண்டும். துரோகிகளை இப்படித்தான் தண்டிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நீக்கம்

நீக்கம்

இதையடுத்து இவரின் வீடியோ டிவிட்டரில் இருந்தும், யூ டியூபில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. 2016 தேர்தலில் டிரம்பிற்கான பிரச்சார திட்டங்களை வகுத்தது ஸ்டீவ் பன்னான்தான். அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவோம் என்ற திட்டத்தில் நிதி மோசடி செய்ததாக கூறி இவர் கைது செய்யப்பட்டு, இவர் வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய கருத்தை இவர் கூறி உள்ளார்.

English summary
US Presidential Election 2020: Trump Fr. Advisor Steve Bannon beheading comment on FBI dir and Fauci removed from the social platforms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X