அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்தான்.. அதுவும் கிளீன் ஸ்வீப்.. பிரபல பாலிமார்க்கெட் தளம் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக பிரபல பாலிமார்க்கெட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலகில் பல விஷயங்களை கணிக்க கூடிய மிகப்பெரிய மார்க்கெட்தான் பாலிமார்க்கெட். கால்பந்து , ரக்பி தொடங்கி அரசியல், போர், குதிரை பந்தயம் என்று பல விஷயங்களை பாலிமார்க்கெட் கணிக்கும். இதில் உள்ள குழுக்கள், மெம்பர்கள் பாலிமார்க்கெட்டில் பல கோடிக்கணக்கில் பணம் போடுவார்கள். ஒவ்வொரு போட்டியிலும், தேர்தலிலும் பல கோடிக்கு இதில் பெட்டிங் நடக்கும். பல லட்சம் கோடி ரூபாய் இந்த பாலிமார்க்கெட் தளத்தில் போடப்படும்.

இதன் காரணமாகவே பாலிமார்க்கெட் பொதுவாக உண்மையான முடிவையே கொடுக்கும். ஏனென்றால் பலர் யாருக்கு பெட்டிங் செய்கிறார்களோ அவர்களே வெற்றிபெறுவார்கள். காரணம்.. பெட்டிங் செய்ய கூடிய யாரும்.. பெரிதாக ஆராய்ச்சி செய்யாமல் பெட்டிங் செய்ய மாட்டார்கள். தீவிரமாக சோதனைக்கு பின்பே பெட்டிங் செய்யப்படும்.

US Presidential Election 2024 EXIT POLLS Polymarket predicts clean sweep win for Donald Trump Over Kamala Harris

இதன் காரணமாக பொதுவாக பாலிமார்க்கெட் பெட்டிங் தளத்தில் செய்யப்படும் பெட்டிங் கணிப்புகள் உண்மையாகவே இருக்கும். பொதுவாக இவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் செய்ய கூடிய கணிப்புகளும் கூட கவனம் பெறும்.

பாலிமார்க்கெட் இந்த முறை டொனால்ட் டிரம்பிற்கு 62.2 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு இதுவரை கொடுத்துள்ளது. கடந்த 4 மணி நேரமாக டிரம்ப் 62 சதவிகிதத்திலேயே இருக்கிறார். இன்னொரு பக்கம் கமலா ஹாரிஸுக்கு 38 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பெரும்பாலும் டிரம்ப்.. மீண்டும் அதிபராக வாய்ப்பு உள்ளதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. அங்கே அதிக அளவில் எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார். அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும்.

அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

ஒரு மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திற்கு சம பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. கறுப்பின மக்கள்.. அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் பிரதிநித்துவம் இருக்க வேண்டும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடாது என்பதற்காக இந்த எலக்ட்ரல் வாக்கு முறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.

மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும். உதாரணமாக ஒரு மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களுக்கே.. மொத்தமாக அந்த மாகாணத்தின் எல்லா எலக்ட்ரல் வாக்குகளும் வழங்கப்படும்.

மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+