அலறவிடும் டிரம்ப்.. அமெரிக்கா சோதித்த மினிட்மேன் III ஏவுகணை! மொத்த உலகத்துக்கும் பேராபத்து.. ஷாக்
நியூயார்க்: உலகில் எங்கு வேண்டுமானாலும் அணுஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தும் வகையில் மினிட்மேன் III (Minuteman III) கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை அமெரிக்கா டெஸ்ட் செய்துள்ளது. இது மொத்த உலகத்தையும் அலறவைத்துள்ளது. இந்த ஏவுகணை எவ்வளவு வேகத்தில் செல்லும்? எவ்வளவு கிலோமீட்டர் பயணித்து தாக்கும்? என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்போது நாடுகளுக்கு இடையேயான மோதல் என்பது அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. அதேபோல் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே பஞ்சாயத்து உள்ளது.

அதேபோல் ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் இடையே நாளுக்கு நாள் மோதல் என்பது அதிகரித்து வருகிறது. இதுதவிர ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பஞ்சாயத்து, சீனா - தைவான் பிரச்சனை என்று பல மோதல்கள் உள்ளன. இதனால் ஒவ்வொரு நாடும் தங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் தான் அமெரிக்கா செய்த ஒரு செயல் மொத்த உலக நாடுகளையும் அலற வைத்துள்ளது. அதாவது அமெரிக்கா தற்போது சக்தி வாய்ந்த மினிட்மேன் III (Minutemen III) என்ற ஏவுகணையை டெஸ்ட் செய்துள்ளது. இந்த ஏவுகணை என்பது சாதாரணமானது இல்லை. இதனை பயன்படுத்தி அணுஆயுத தாக்குதல் கூட நடத்தலாம். அதுமட்டுமின்றி இந்த ஏவுகணை மின்னல் வேகத்தில் பாய்ந்து இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மினிட்மேன் III ஏவுகணை தான் மொத்த உலக நாடுகளையும் அச்சுறுத்தி உள்ளது. இதற்கு காரணம் இந்த ஏவுகணையை பயன்படுத்தி உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்க முடியும். அதாவது இது ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்ட்டிக் வகை ஏவுகணையாகும் (Minuteman III intercontinental ballistic missile). இதனை சுருக்கமாக ஐசிபிஎம் ஏவுகணை என்று அழைக்கிறார்கள்.
இந்த ஏவுகணை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி தளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏவுகணைகளை சோதித்து பார்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது மினிட்மேன் III ஏவுகணையின் உள்ளே அணுஆயுதம், வெடிப்பொருட்கள் எதுவும் வைக்கப்படவில்லை. வெறுமனே ஏவுகணை மட்டும் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை மணிக்கு 24,140 கிலோமீட்டர் வேகத்தில் விண்ணில் சீறிப்பாய்ந்து ஆஸ்திரேலியாவி்ன வடகிழக்கு கடற்கரை அருகே உள்ள மார்ஷல் தீவின் ரொனால்ட் ரெகன் பாலிஸ்டிக் ஏவுகணை சோதிக்கும் தளத்தை அடைந்தது. இந்த வீடியோவை அமெரிக்காவின் விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணை மணிக்கு 24,140 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடியது. இதன் ரேஞ்ச் என்பது சுமார் 13 ஆயிரம் கிலோமீட்டர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நேற்றைய தினம் அந்த ஏவுகணையின் ரேஞ்ச் என்பது 6,760 கிலோமீட்டராக இருந்தது. அதாவது ஏவப்படும் இடத்தில் இருந்து 6,750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை சென்றடைந்தது.
நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சுமார் 13 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ளது. இதனால் நம் நாட்டை இந்த ஏவுகணையால் அமெரிக்காவால் குறிவைக்க முடியும். அதுமட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு ராணுவ தளம், விமானப்படை தளம், கடற்படை தளம் உள்ளது. நம் நாட்டுக்கு அருகே என்று எடுத்து கொண்டால் கத்தாரில் அமெரிக்காவுக்கு விமானப்படை தளம் உள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் பல நாடுகளில் அமெரிக்காவுக்கு தளங்கள் உள்ளதால் இந்த மினிட்மேன் III ஏவுகணையை பயன்படுத்தி அமெரிக்காவால் உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் அணுஆயுத தாக்குதலை நடத்த முடியும். இதனால் அமெரிக்காவின் இந்த ஏவுகணை சோதனை என்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சோதனைக்கு பிறகு அமெரிக்க குளோபல் ஸ்ட்ரைக் கமாண்ட் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‛‛இந்த ஐசிபிஎம் ஏவுகணையின் சோதனை என்பது நாட்டின் அணுஆயுத தாக்குதலை தடுக்கும் வகையிலும், ஐசிபிஎம் ஏவுகணையை தயார் படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை சார்பில், ‛‛நாட்டின் டிரைட் திட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் தளங்கள் உள்ளன. எதிரிகளிடம் இருந்து தரைப்படை, விமானப்படை, கடற்படை மூலம் நடத்த சாத்தியமான தாக்குதலை தடுப்பதற்காக இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த மினிட்மேன் III ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும். இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை என்பதால் இதனை நிலத்தில் இருந்து மட்டுமின்றி நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவி இலக்கை அழிக்க முடியும். இது உலக நாடுகளை அச்சுறுத்த சோதனை செய்யப்படவில்லை. அமெரிக்காவின் வழக்கமான ஏவுகணை சோதனைகளின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications