சீனாவை விடுங்க.. சொந்த நாட்டு மத்திய வங்கி மீதே போரை அறிவித்த டிரம்ப்.. அமெரிக்காவில் அதிர்ச்சி
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மத்திய வங்கி.. அதாவது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற அமைப்பிடம் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து உள்ளார் டொனால்ட் டிரம்ப்.
மத்திய வங்கி மீது போர் தொடுக்க தயாராக இருப்பதாக அவர் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளாராம். அவர் விடுத்த எச்சரிக்கையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி உடனே வரியை குறைக்க வேண்டும். வரி மதிப்பை (நம் நாட்டின் ரெப்போ ரேட் போல) உடனே குறைக்க வேண்டும். இல்லையென்றால் அவரை நீக்க வேண்டி இருக்கும். அந்த மத்திய வங்கி வேண்டும் என்றால் சுதந்திரமான அமைப்பாக இருக்கலாம். ஆனால் நான் நினைத்தால் அவரை நீக்க முடியும். அவரை நீக்கி விட்டு வரியை குறைக்க சொல்ல முடியும். அடுத்த சில வாரங்களுக்குள் வரியை குறைக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை அந்த வங்கி சந்திக்கும் என்று அவர் கூறி உள்ளார்.
இதற்கு பவல் அளித்த பதிலில், நாங்கள் வரி குறைப்பை பல ஆலோசனைக்கு பின்பே எடுப்போம். டிரம்ப் சொல்கிறார் என்பதால் செய்ய முடியாது. அதோடு 2026 மே வரை என் பதவிக்காலம் இருக்கிறது. அதற்கு முன் நான் ராஜினாமா செய்யும் திட்டத்தில் இல்லை என்று கூறி உள்ளார் .

பவல் எச்சரிக்கை
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள உலகளாவிய வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து உள்ளது. இதன் விளைவுகள் மிக மோசமாக இருப்பதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார். முக்கியமாக டிரம்ப் செய்யும் ஒவ்வொரு மூவும் அதிக பணவீக்கம் ஏற்பட காரணமாக மாறி உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்காவை அதள பாதாளத்திற்கு தள்ளுவதாக அவர் எச்சரித்து உள்ளார்.
டிரம்ப் எடுக்கும் முடிவுகள் மோசமானதாக உள்ளன. அவர் எடுக்கும் முடிவுகளை கணிக்க முடியவில்லை. அமெரிக்காவை மோசமான நிலைக்கு தள்ளும் முடிவுகளாக அவை உள்ளன. தினம் தினம் மார்க்கெட் இதனால் பாதிக்கிறது. பல கொள்கைகளின் அடிப்படைகளை அவர் மாற்றுகிறார். அதுதான் சிக்கலே. இதனால் பணவீக்கம் அதிகரிக்கிறது. அதாவது பணத்தின் மதிப்பு குறைகிறது. இருக்கிற பணத்தை வைத்து பொருட்களை வாங்க முடியவில்லை. டாலரின் மதிப்பு வேகமாக சரிகிறது. இதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும். எதிர்பார்க்காத சரிவை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் நாம் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்று டொனால்ட் டிரம்பிற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார்.
வர்த்தக போர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீனா மீது வரி
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார். தற்போது நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34% வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
இப்போது சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டது.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications